தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரையில் நள்ளிரவு பலத்த காற்று, இடியுடன் கனமழை சுகாதாரச் சீர்கேடு, சாலைகளில் நீர்தேக்கம், தீவான குடியிருப்புகள்

7 May 2026, 9:40 pm
மதுரையில் நள்ளிரவு பலத்த காற்று, இடியுடன் கனமழை சுகாதாரச் சீர்கேடு, சாலைகளில் நீர்தேக்கம், தீவான குடியிருப்புகள்

மதுரையில் நள்ளிரவு பலத்த காற்று, இடியுடன் கனமழை சுகாதாரச் சீர்கேடு, சாலைகளில் நீர்தேக்கம், தீவான குடியிருப்புகள்

மதுரை, மே 7- மதுரையில் புதன்கிழமை நள்ளிரவு இடி, மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

குறிப்பாக நள்ளிரவில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து இடி சத்தத்துடன் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மரங்கள் முறிந்து விழுந்துவிடுமோ, வீடு களில் அதிர்வு ஏற்படுமோ, மின் இணைப்பு கள் துண்டிக்கப்படுமோ என்ற பயத்தி லேயே மக்கள் இரவை கழித்தனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, ஆனையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதன் காரணமாக மதுரை ரயில் நிலையம், பாண்டி பஜார், கோவில் பாப்பாகுடி, சங்கீத் நகர், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கி பெரும் குளம் போல் காட்சி யளித்தது.

சுகாதாரச் சீர்கேடு மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க் கெட்டில் கனமழையால் மழைநீர் தேங்கி கடும் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து மார்க்கெட் சங்கத் தலைவர் மாயன் கூறுகையில், “மார்க்கெட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் மண் அடைத்து கிடக்கின்றன.

இதனால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலைகளிலேயே தேங்கி நிற்கிறது

. பல இடங்களில் குப்பைகள் மற்றும் காய்கறி கழிவுகள் மழைநீருடன் கலந்து கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

வெங்காயக் கடை பகுதியில் கழிவுநீர் இணைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பெரிய பள்ளம் சரிவர மூடப்படாததால், சரக்கு வாகனங்கள் அதில் சிக்கி விபத்துக்குள்ளா கின்றன.

தக்காளி ஏற்றி வந்த சரக்கு வாகனம் பள்ளத்தில் சிக்கியது.

பின்னர் ஜேசிபி மூலம் வாகனம் மீட்கப்பட்டது. ஒரே பாதையில் வாகனங்கள் இயக்கப் படுவதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

மார்க்கெட்டின் பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படு கின்றனர்.

சுமைப்பணி தொழிலாளர்கள் பலர் வெறுங்காலில் நடந்து வேலை செய்யும் நிலை உள்ளது.

ஏற்கனவே பலருக்கு காயங் கள் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள் ளன.

மேலும், அருகிலுள்ள குடிநீர் தொட்டி யிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாளச் சாக்கடையில் கலந்து காய்கறிகள் விற்பனை செய்யப்படும் பகுதிகளுக்குள் புகுகிறது. இத னால் பொதுமக்களுக்கு தொற்று நோய் அபா யம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான விவசாயி கள், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் முக்கியமான மார்க்கெட்டான இதை அதிகாரிகள் முறை யாக பராமரிக்கவில்லை” என அவர் வேதனை தெரிவித்தார்.

தீவுபோல் மாறிய குடியிருப்புகள் மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி சத்யா நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்க ளாக பெய்த மழையால் குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டு தீவு போல் காட்சியளிக்கிறது. இப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாகவே மழைக்காலங்களில் இதே நிலை தொடர்கிறது. 15 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட பிரதான கால் வாய் தற்போது முற்றிலும் சிதிலம டைந்துள்ளது. கால்வாய்கள் தூர்வாரப்படா ததாலும் குப்பைகள் அகற்றப்படாததாலும் அடைப்புகள் ஏற்பட்டு மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுகிறது. இப்பகுதியில் தற்போது 100க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன.

கால்வாயை உயர்த்தி மறுகட்டுமானம் செய்து முறையாக தூர்வாரி னால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.

ஆனால் உள்ளாட்சி நிர்வாகம் மாதம் ஒரு முறைக்கூட சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில்லை” என குற்றம்சாட்டி னர்.

உடனடி நடவடிக்கை கோரிக்கை மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உட னடியாக மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து, மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், வாகனங்கள் மற்றும் மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய நீரை அகற்றுதல், மழைநீர் கால்வாய்களை தூர் வாருதல், மழைநீர் நேரடியாக கண்மாய் மற்றும் வாய்க்கால்களுக்கு செல்லும் வகை யில் நிரந்தர வடிகால் அமைப்புகளை ஏற் படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அவசர அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.