மதுரை மாவட்டத்தில் கனமழைமதுரை,
11 Jun 2026, 9:40 pm

மதுரை மாவட்டத்தில் கனமழைமதுரை,

ஜூன் 11-கடந்த ஒரு வாரமாக கடும் வெப்பம் தாக்கிய நிலையில், வியாழக்கிழமை மாலை மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த திடீர் மழை மக்களை மகிழ்ச்சியடையச் செய்ததுடன், வெப்பத்தின் தாக்கத்தையும் கணிசமாக தணித்தது.

மதுரை மாநகர் மட்டுமின்றி அழகர்கோவில், வாடிப்

பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் சுமார் ஒரு மணி

நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். சில பகுதிகளில் மாலை நேர போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கோடை வெப்பம் தீவிரமடைந்திருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் மதுரை மாநகர் மற்றும் சுற்று

வட்டாரப் பகுதிகளில் வெப்பம் தணிந்து மிதமான சூழல்

ஏற்பட்டது.