தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பருவமழை தீவிரம்: அவலாஞ்சியில் 19 செ.மீ. மழைப்பதிவு

6 Jul 2026, 1:02 am
பருவமழை தீவிரம்: அவலாஞ்சியில் 19 செ.மீ. மழைப்பதிவு

பருவமழை தீவிரம்: அவலாஞ்சியில் 19 செ.மீ. மழைப்பதிவு

சுற்றுலாப் பயணிகள் வருகை சரிவு

உதகை, ஜூலை 5- நீலகிரியின் நீர்பிடிப்பு பகுதி யான அவலாஞ்சியில் 19 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அதே போல் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக மழை பொழிவை தென் மேற்கு பருவமழை தான் கொடுக் கும். ஆனால், இந்த ஆண்டு வழ கத்தைவிட ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங் கியது. ஜூன் மாதம் நீலகிரியில் எப் போதும் இல்லாத அளவுக்கு மழை குறைவாக இருந்தது. இந்நிலை யில், கடந்த 3 நாட்களாக நீலகிரி யில் பருவமழை சற்று தீவிரம டைந்து வருகிறது. உதகை மற்றும் குந்தா தாலுகாக்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. உதகை நகரிலும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வரும் நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, முக்குருத்தி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவ லாஞ்சி பகுதியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்து வருகிறது. இதேபோல் அப்பர் பவானியில் 8.7 செ.மீ, போர்த்திமந்து 8.4 செ.மீ, எமரால்டு 5.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அப்பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருவதால், கடும் குளிர் நிலவுகிறது. நீலகிரியில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந் திருப்பதால் விவசாயிகள் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்தியுள்ளனர். தொடர் மழை காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை பெருமளவு குறைந்து சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், சனி யன்று பெய்த மழை காரணமாக உதகை படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. பிக்கட்டி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் உதகை - கோத்த கிரி மாநில நெடுஞ்சாலையில் பாக்யா நகர் பகுதியில் கற்பூர மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதை தீயணைப்புத் துறை யினர் வெட்டி அகற்றினர். இதே போல் வேறு சில இடங்களில் லேசான மண்சரிவு மற்றும் சாலை யில் மரங்கள் விழுந்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதை வருவாய்த்துறையினர் மற்றும் தீய ணைப்புத் துறையினர் இணைந்து சரி செய்தனர். உதகை நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழை யால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. அதேசமயம், கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை தீவிரம டையாததால், விவசாயிகள் ஏமாற் றமடைந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.