முந்தய பக்கம்

பலத்த கனமழையால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் சேதம்

17 May 2026, 11:11 pm
பலத்த கனமழையால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் சேதம்

பலத்த கனமழையால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் சேதம்

கோவை, மே 17- கோவையில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.

கோவை புறநகர் பகுதி களில் வெள்ளியன்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது.

வடவள்ளி, கணுவாய், இடையர்பாளையம், தொண்டாமுத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக மழைபெய்தது.

ஒரு சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

இந்நிலையில், மருதமலை அடிவாரத்தில் அமைந் துள்ள பாரதியார் பல்கலை கழக வளாகத்தில் பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் 10 க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

சில மரங்கள் பல்கலை கழக வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் மீதும் சாய்ந்தது.

மரங்கள் சாய்ந்ததால் ஒரு சில இடங்களில் கட்டிடங் களும் சேதமடைந்தது.

மேலும் ஏற்கனவே பராம ரிப்பு இல்லாமல் இருக்கும் கட்டிடங்களில் மழை நீர் ஒழுகி கட்டிடங்களுக்குள் புகுந்தது.

மரங்கள் வேரு டன் சாய்த்துள்ள நிலையில் அவற்றை அப்புறப்ப டுத்தும் பணியில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஈடு பட்டுள்ளனர்.

600 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாரதியார் பல்கலை வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங் கள் இருப்பது குறிப்பிடதக்கது.

Share
FacebookXWhatsAppTelegram