புயல் வலுவிழந்தும் தொடரும் கனமழை - தமிழ்நாட்டிற்கு இன்றும் ரெட் அலர்ட்!
2 Dec 2025, 6:39 am
<p>தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது<br />
இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் அது தற்போது சென்னைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது.<br />
இது 12 மணி நேரம் நீடிக்கும் எனவும், மணிக்கு 3 கி.மீ. வேகத்தில்தான் நகர்ந்து இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.<br />
இதனால் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.</p>
