தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவை, நீலகிரியில் கனமழை: பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தது!

8 Oct 2026, 3:11 am
கோவை, நீலகிரியில் கனமழை: பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தது!

கோவை, நீலகிரியில் கனமழை: பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தது!

கோவை, அக்.7-மேட்டுப்பாளையம், கல்லார் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம், சேரன் நகர் பகுதியில் பலத்த மழையால் அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அருகிலிருந்த கழிவுநீர் கால்வாய் அடைபட்டதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து, வீட்டுப்பொருட்கள் சேதமடைந்தன.

சுற்றுச்சுவரை சீரமைத்து, கழிவுநீர் கால்வாயை முறையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும், மேட்டுப்பாளையம் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் கல்லார் அருகே ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கபபட்டது. போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில்கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின்பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அக்.7 முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மழை குறைந்து நீர்வரத்து சீரான பிறகே சுற்றுலா மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் கனமழைமேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை புறப்படும் மலை ரயில் குன்னூருக்கு காலை 10.15 மணிக்கு வந்து சேரும். ஆனால், மழை காரணமாக புத

னன்று ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக மதியம் 1.45 மணிக்கு குன்னூர் வந்தது. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தண்டவாளங்களில் பல இடங்களில் சிறிய பாறைகள் கிடந்ததால் அவற்றை அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் நீராவி ரயிலின் உந்து சக்தி குறைந்து, ரயில் தாமதமானதாக கூறப்படுகிறது. உதகை எல்க்ஹில் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால், சாலையோர மண் கழிவுகள் சுமார் 300 அடி வரை அடித்துச் செல்லப்பட்டு விவசாய நிலத்திற்குள் புகுந்தன. இதனால் அங்குள்ள கிணற்று நீர் சேறும் சகதியுமாக மாறியது. மேலும், குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் செவ்வாயன்று இரவு பெய்த கனமழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்துபாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், உதகை நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். எனவே, நகராட்சி நிர்வாகம் முறையாக கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.