திருவண்ணாமலையில் எடைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
20 Dec 2025, 3:38 pm
<p>பணி நிரந்தரம், மருத்துவக் காப்பீடு மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை காலிப் பணியிடங்களில் முன்னுரிமை உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட எடைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில இணைச் செயலாளர் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.வி. சரவணன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.</p>
