தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் விரோத ஒன்றிய அரசுக்கு எதிராய் சேலத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆவேசம்

28 Nov 2025, 2:28 pm
தொழிலாளர் விரோத ஒன்றிய அரசுக்கு எதிராய் சேலத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆவேசம்
<p><strong>தொழிலாளர் விரோத ஒன்றிய அரசுக்கு எதிராய்&nbsp;சேலத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆவேசம்&#39;</strong><br /> சேலம், நவ.28- கார்ப்ரேட்டுகளின் நலனுக்காக தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு தொகுப்புகளாக சுறுக்கிய ஒன்றிய மோடி அரசை கண்டித்து, சேலத்தில் வெள்ளியன்று சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க உரிமை, தொழி லாளர் பாதுகாப்பு, நியாயமான ஊதியம் உள்ளிட்ட தொழிலா ளர்களின் அடிப்படை உரிமை களை பறிப்பதற்காக ஒன்றிய பாஜக தலைமையிலான அரசு திட்ட மிட்டு தொழிலாளர் நலச்சட்டங் களை சுருக்கியுள்ளது. இந்த நான்கு சட்டத் தொகுப்புகளையும் உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் என் கிற கோரிக்கையை முன்வைத்து, &nbsp;சிஐடியு அனைத்து சுமைப்பணி தொழிலாளர் சங்கங்கள் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் வெள்ளியன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு இரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தின் செயலா ளர் ஏ.கோவிந்தன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆர். வெங் கடபதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் பி.பன்னீர்செல் வம் வாழ்த்திப் பேசினார். மாவட்ட உதவித் தலைவர் எஸ். கே. தியாக ராஜன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். இதில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.இளங்கோ, மாநிலக் குழு உறுப் பினர் பி.விஜயலட்சுமி, சிஐடியு &nbsp;மாவட்ட நிர்வாகிகள், சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஒன்றிய மோடி &nbsp;அரசை கண்டித்து, ரயில்வே ஏற்று மதி இறக்குமதி தொழிலாளர் சங்கம், சேலம் ஜில்லா சுமை &nbsp;தூக்கும் தொழிலாளர் சங்கம், &nbsp;சேகோ ஸ்டார்ச் குடோன் தொழிலா ளர்கள், செவ்வாய்பேட்டை கடை &nbsp;மண்டி சுமை தூக்கும் தொழிலாளர் கள், செவ்வாய்பேட்டை மளிகை பஜார் தொழிலாளர்கள், முக்கோ ணம் பால் மார்க்கெட் தொழிலா ளர்கள், தேர்நிலையம், அரியாக் கவுண்டம்பட்டி வேர் ஹவுஸ் தொழி லாளர்கள், சேலம் டவுன் இரும்பு கடை லோடிங் அன்லோடிங் தொழி லாளர்கள், சண்முகா கிளை, பேக்ட் &nbsp;கிளை (FAGET கிளை), ஏஎம்டி ரெகு லர் டிரான்ஸ்போர்ட், நெத்தி மேடு குடோன், ஏஆர்சி ட்ரான்ஸ்போர்ட், சாந்திலால் ட்ரான்ஸ்போர்ட், நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு கிளைப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றது குறிப் பிடத்தக்கது. உருக்காலை தொழிலாளர்கள் போராட்டம் இதேபோன்று, தொழிலாளர் நலச் சட்டங்களை பறிக்க துடிக்கும் மோடி அரசை கண்டித்தும், 39 மாத அரியர் தொகையை வழங்க வலியு றுத்தியும், ஹெச்ஆர்ஏ -வை இறு திப்படுத்த கோரியும், அனாமலி மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரியும், விரைவாக என்ஜெசிஎஸ் கூட்டத்தை கூட்ட வும் வலியுறுத்தி சேலம் உருக் காலை சிஐடியு சங்கம் மற்றும் &nbsp;சேலம் உருக்காலை காண்ட்ராக்ட் தொழிலாளர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இரும் பாலை வாளாக கேட் நம்பர் 5 ஏ வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், குப்புசாமி, பொருளாளர் பாலாஜி சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.பன் னீர்செல்வம் உள்ளிட்டு பலர் பங் கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.