தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனி நலவாரியம் அமைக்கக் கோரி பிப்.12-இல் மாநிலந் தழுவிய போராட்டம் சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு!

10 Dec 2025, 4:08 pm
தனி நலவாரியம் அமைக்கக் கோரி பிப்.12-இல் மாநிலந் தழுவிய போராட்டம் சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு!
<p><strong>தனி நலவாரியம் அமைக்கக் கோரி பிப்.12-இல் மாநிலந் தழுவிய போராட்டம் சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு!</strong></p> <p>சேலம், டிச. 10 - &nbsp;சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனி &nbsp;நலவாரியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு &nbsp;திட்டங்களை வலியுறுத்தி, பிப்ரவரி 12 அன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடை பெறவுள்ளதாக, சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) குழுக் கூட்டம், சேலம் &nbsp;வி.பி. சிந்தன் நினைவகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சம்மேளனத் தலைவர் ஆர். &nbsp;வெங்கடபதி தலைமை வகித்தார். இக்கூட்டத் தில், பல்வேறு தொழிலாளர் கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில், ஜனவரி 29 அன்று &nbsp;நடைபெறும் மறியல் போராட்டத்தில் சுமைப் பணித் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது &nbsp;என முடிவு செய்யப்பட்டது. மேலும், தொழிலாளர் விரோத நான்கு &nbsp;தொகுப்பு சட்டங்களை ஒன்றிய அரசு ரத்து &nbsp;செய்ய வேண்டும்; சரக்கு பரிவர்த்தனையில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இரண்டு சதவிகிதம் நலநிதி வழங்க வேண்டும். கேர ளத்தைப் போல், சுமைப்பணித் தொழிலா ளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்; சுமைப்பணித் தொழில், தொழிலா ளர்களை பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட &nbsp;கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 12 &nbsp;அன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்து வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. &nbsp;இக்கூட்டத்தில் சம்மேளன பொதுச்செய லாளர் அருள்குமார், சிறப்புத் தலைவர் எஸ். &nbsp;குணசேகரன், நிர்வாகிகள் ஏ. கோவிந்தன், பிச்சமுத்து, பாண்டி, சுடலைக் காசி, உத்திரா பதி, அர்த்தநாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.