வெப்ப அலைகளும் மறைக்கப்பட்ட மரணங்களும்
1 Jun 2026, 9:38 pm

வெப்ப அலைகளும் மறைக்கப்பட்ட மரணங்களும்

நாட்டில் கோடைக்காலங்களில் சுட்டெரிக் கும் வெப்பம் என்பது வெறும் பருவகால மாற்ற மல்ல, அது நிசப்தமான ஒரு பேரழிவு. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றின் முடிவுகள், ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் உண்மையை எந்த அளவுக்கு மறைக்கின்றன என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளன. ஓராண்டில் வெறும் 800 பேர் மட்டுமே வெப்பத் தால் இறப்பதாக அரசு கணக்கு கூற, புதிய ஆய்வோ, ஒரு நாள் கடும் வெப்ப அலையி லேயே சுமார் 3,400 பேர் உயிரிழப்பதாக எச்சரிக்கி றது. ஒருவேளை இந்த வெப்ப அலை ஐந்து நாட்கள் தொடர்ந்து நீடித்தால், அந்த எண்ணிக் கை 30 ஆயிரத்தை தொடும் என்பது ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கும் அதிர்ச்சி யூட்டும் உண்மையாகும்.

வெப்பத்தால் ஏற்படும் மரணங்கள் ஏன் இவ்வளவு குறைவாகப் பதிவு செய்யப்படு கின்றன? முதன்மைக் காரணம், இந்தியாவில் வெப்ப அலை இன்னும் ‘தேசியப் பேரிடராக’ அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், வெப்பத்தால் நிகழும் உயிரிழப்புகள் ‘வெப்பத் தாக்குதல்’ என முறையாகப் பதிவு செய்யப்ப டாமல், மறைக்கப்படுகின்றன. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாநிலங்கள் இந்த மரணச் சுமையை அதிகமாகச் சுமக்கின்றன. அந்த மாநில அரசுகளிடம் தற்காப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான நிதி வசதியும், அடிப்படை கட்டமைப்பு வசதி களும் இல்லாததே இந்த அவலத்திற்கு முக்கியக் காரணமாகும்.

வெப்ப அலைகளை வெறும் இயற்கை நிகழ்வாகப் பார்க்காமல், ஒரு பொது சுகாதார அவசர நிலையாக அரசு பார்க்க வேண்டிய தருணம் இது. ஒடிசா சூறாவளிக்குப் பிறகு பேரிடர் மேலாண்மை எப்படிப் பலப்படுத்தப் பட்டதோ, அதுபோலவே வெப்ப அலைகளை யும் தேசியப் பேரிடராக அறிவித்து, மாவட் டந்தோறும் அதற்கெனத் தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.சமீபத்தில் உத்தரப்பிர தேசத்தில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்று டன் கனமழை பெய்தது. திடீரென பெய்த மழை யால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்படி மக்கள் மழை, வெயில், வெள்ளம் என இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுவது தொடர்கிறது.

இதில் வெப்பம் என்பது கண்ணுக்குத் தெரி யாத கொலையாளி. இனியாவது, வெறும் காகி தங்களில் பதிவாகும் குறைவான புள்ளிவிவ ரங்களை நம்பி ஏமாறாமல், அறிவியல் பூர்வ மான தரவுகளின் அடிப்படையில் வலுவான கட்டமைப்புகளை உருவாக்கி, ஏழை மக்களின் உயிரைக் காக்க அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், தடுக்கக்கூடிய இத்தகைய மரணங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.