வெயிலும் - எல் நினோவின் தாக்கமும் - ப.துளசி நாராயணன்
5 Jun 2026, 1:55 am

வெயிலும் - எல் நினோவின் தாக்கமும் - ப.துளசி நாராயணன்

தில்லி, மத்தியப் பிரதேசம், உத் தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய வடமாநிலங்களில் நிலவும் கடுமை யான வெயில் காரணமாக மே 28 அன்று ஒரே நாளில் 3,400 பேர் மரண மடைந்ததாகவும், கடந்த ஐந்து நாட் களில் இதுபோன்று 30,000 மரணங்கள் நிகழ்ந்ததாகவும், உ.பி-யில் மட்டுமே 8,100 பேர் இறந்துபோனதாகவும் ‘சுற்றுச்சூழல் சுகாதார எல்லைகள்’ (Frontiers of Environmental Health) அமைப்பு வெளியிட்ட ஆய் வறிக்கையை மே 29, 2026 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இந்த வெயிலின் தாக்கம் செப்டம்பர் வரை நீடிக்கும் எனப் பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்திய நாட்டின் 70% நிலப்பரப்பு தென்மேற்கு பருவமழையை நம்பித் தான் இருக்கிறது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே இருக்கும் எனப் பல இயற்கை ஆய்வுகள் கணிக்கின்றன. இது பெய்யாமல் போனால் வெயி லின் தாக்கமும் வெப்பத்தின் உக்கிர மும் தீவிரமடைவது இயல்பானதே.

எல் நினோ: 150 ஆண்டுகால வரலாறு 2026 ஜூன் அல்லது ஜூலை முதல் 2027 செப்டம்பர் அல்லது அக்டோபர் வரை ‘எல் நினோ’ (El Nino) என்கின்ற வெப்பத் தாக்குதல் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

தென் அமெரிக்காவை ஒட்டியுள்ள பசிபிக் பெருங்கடலின் மேல் பரப்பு அதன் சராசரி வெப்பநிலையைவிடக் குறை கிறபோது ‘லா நினா’ என்றும், சராசரி அளவைவிடக் கூடுகின்ற போது ‘எல் நினோ’ என்றும் அழைக்கப் படுகிறது.

தற்போது சராசரி அளவை விடக் கடல் கூடுதல் வெப்பமாவதை உலக வானிலையியல் அமைப்புகள் உறுதி செய்துள்ளன. பசிபிக் பெருங்கடலில் சராசரி யை விட 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி வரை வெப்ப உயர்வு ஏற்பட்டால் அது ‘சூப்பர் எல் நினோ’ எனப்படுகிறது.

ஆனால், இந்த ஆண்டு இது 2.5 டிகிரி வரை உயர வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற சூப்பர் எல் நினோ 1.8 டிகிரி வெப்பத்துடன் சரியாக 150 ஆண்டு களுக்கு முன்பு (1876-இல்) தாக்கிய போது சென்னை ராஜதானியில் மட்டும் மூன்றில் ஒரு பகுதி மக்கள் பஞ்சத்தால் மாண்டனர் என்பது வரலாறு. பொதுவாக ஒரு டிகிரி செல்சியஸ் கூடுதல் ஆவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்.

ஆனால், வெறும் 150 ஆண்டு களிலேயே 1.2 டிகிரி செல்சியஸ் உயர்வு ஏற்பட்டிருப்பது வேதனைக் குரியது.

அதாவது, எட்டு லட்சம் வருடங்களில் இல்லாத வெப்பநிலை யில் உலக மனித சமூகம் வாழத் தள்ளப்படுகிறது

. மனிதரால் ஏற்பட்ட பேரழிவும் கார்ப்பரேட் கொள்ளையும் இது தானாக ஏற்பட்டதல்ல; மனித குலத்தில், இயற்கையை அழித்துக் கொள்ளை லாபம் ஈட்டத் துடிக்கும் சில மனிதர்களால் ஏற்பட்ட பேரழிவு.

இதன் தாக்கத்தால் கோடைக் காலம் செப்டம்பர் வரை நீடிக்கும்; தென் மேற்கு பருவமழை பலவீன மடைந்து வறட்சி நிலவும். இதனால், அணிதிரட்டப்படாத தொழிலாளர் கள், சமையலறை அனலில் பணி புரியும் ஆண்கள் மற்றும் பெண்கள், சிறு-குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.

தமிழகத்தில் காவிரி டெல்டா நீர் பிடிப்பு பகுதிகள் கடுமையாகப் பாதிப்படையும் என்கின்ற அபாய எச்சரிக்கைகள் உள்ளன.

இந்த வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் காடுகளின் பரப்பளவு 50 சதவீதத்திலிருந்து தற்போது 24 சதவீதமாகக் குறைந்துள்ளது. வனம் மற்றும் மலைகளில் புதிய திட்டப் பணிகளுக்குக் கிராம பஞ்சாயத்தின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்கின்ற விதி ‘வன உரிமைச் சட்டம் 2006’-இல் இருந்தது.

கார்ப்பரேட் கொள்ளைக்குத் தடையாக இருந்த இந்தச் சட்ட விதியை ‘வன பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2023’ மூலம் பலவீனமடையச் செய்தது மோடி அரசு. இது கார்ப்பரேட் குழுமங்கள் வனங்களை அழிக்கப் பெரும் சாதகமாக மாறியது.

வட மாநிலங்களின் நிலத்தடி நீரைக் காக்கும் அரணாக விளங்கும் பழமையான ‘ஆரவல்லி மலைத்தொடரைச்’ சூறையாடவும், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுமார் 50 லட்சம் மரங்களை வெட்டிச் சாய்க்கவும் கார்ப்பரேட்டுகளுக்குக் கதவைத் திறந்துவிட்டுள்ளது மோடி அரசு. இறுதி ‘அறம்’ தங்களது லாப வேட்டைக்காக இயற்கை வளங்களை அழிக்க எவ ருக்கும் உரிமை இல்லை.

இதனைத் தனது ‘மூலதனம்’ நூலின் மூன்றாம் பாகத்தில் மாமேதை காரல் மார்க்ஸ், “பூமியை அடுத்த தலைமுறைக்கு மேம்பட்ட நிலையில் தர வேண்டிய வர்களே மனிதர்கள்” எனத் தெளி வாகக் கூறுகிறார். புறநானூறும், “நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்தி சினோரே” (நீரையும் நிலத்தையும் இணைத்து பலப்படுத்துபவர்களே மக்களின் வாழ்க்கையை உருவாக்கு பவர்கள்) என்கிறது. இதே அறத்துடன் ஆட்சியாளர் கள் பயணிக்க மறுத்தால், எதிர்நின்று வலுவாகக் குரல் எழுப்புவது உழை க்கும் மானுட சமூகத்தின் கடமை. வாழ்விற்கான சமர் புரிவோம்!