தர்ஹா அருகில் தீபம் ஏற்றுவதற்கு எதிரான வழக்குகள் மீது டிச. 12-இல் விசாரணை!
5 Dec 2025, 4:21 pm
<p><strong>தர்ஹா அருகில் தீபம் ஏற்றுவதற்கு எதிரான வழக்குகள் மீது டிச. 12-இல் விசாரணை!</strong></p>
<p>திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தர்ஹா அருகில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் அளித்த தீர்ப்பை எதிர்த்தும், மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் தரப்பில் நீதிபதி கள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராம கிருஷ்ணன் அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதேபோல நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாத னின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருந் தது. இந்த 2 மேல்முறையீட்டு மனுக்களில், நீதிமன்ற அவமதிப்புக்கு எதிரான தமிழக அரசின் மனுவை, நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்தி ரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு தள்ளு படி செய்துவிட்ட நிலையில், சிக்கந்தர் தர்ஹா அருகில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பை ரத்துசெய்யக் கோரும் மேல் முறையீட்டு மனு, வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக டிசம்பர் 10-ஆம் தேதி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம். அதன் பின்னர் வரும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் படாது; அரசுத் தரப்பு கோரிக்கையின்படி அனைத்து மனுக்களும் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் ஜி. ஜெயச் சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு தெரிவித்தது. ‘சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிர்வதை அனுமதிக்க முடியாது!’ மேலும், இந்த வழக்கில் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தின் மாண்பைக் கடைப்பிடிக்கும் வகையிலேயே பொதுவெளியில் பேச வேண்டும் என்றும், உத்தரவுகள் பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தை அவசரப்படுத்தக் கூடாது என்றும் கூறிய ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்து களைப் பகிர வேண்டாம். அதை அனுமதிக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளது.</p>
