தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மன ரீதியாக நன்றாக இருப்பதே ஆரோக்கியம்

24 Jan 2026, 1:00 pm
மன ரீதியாக நன்றாக இருப்பதே ஆரோக்கியம்
<p><strong>மன ரீதியாக நன்றாக இருப்பதே ஆரோக்கியம்&nbsp;</strong></p> <p>தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடு நிலைப் பள்ளியில் அரசு &nbsp;ஆரம்ப சுகாதார நிலைய மருத்து வர் கெவின் ஆபிரகாம் மாணவர் &nbsp;களுக்கு சுத்தம் மற்றும் ஆரோக்கி யம் தொடர்பான அறிவுரைகளை வழங்கினார். மருத்துவர் கெவின் ஆபிரகாம் மாணவர்களின் பல் &nbsp;வேறு கேள்விகளுக்கும், சந்தே கங்களுக்கும் பதில் கூறினார். அவர் மாணவர்களிடம் பேசுகை யில், ஆரோக்கியம் என்றால் எந்த &nbsp;நோயும் இல்லாமல் இருப்பது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் மன ரீதியாக ஆரோக்கிய மாக இருக்க வேண்டும். உடல் ரீதி யாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதோடு சமூகத்துடனும் ஒத்துப் போக வேண்டும். நம் உடல் இங்கேயே தான் இருக்கும். நம்முடைய மனது &nbsp;வேறு எதையோ நினைக்கும். எடுத் &nbsp;துக்காட்டாக ஆசிரியர் பாடம் நடத் &nbsp;தும் போது வீட்டின் நினைப்பு வரும். &nbsp;அம்மா என்ன சமையல் செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைப்பு ஓடும். நாம் நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்த யோகா செய்ய வேண்டும். தின மும் காலையில் உட்கார்ந்து மூச்சு &nbsp;பயிற்சி செய்ய வேண்டும். நாம் யாருடனும் சண்டை போடாமல் அன்பாக இருக்க வேண்டும். சில மாணவர்கள் சொல் &nbsp;வார்கள். இவன் யாரிடமும் பேச மாட்டான், சண்டை போடுவான் என்று சொல்வார்கள். அப்படி என் &nbsp;றால் அந்த மாணவர் மன ரீதியாக &nbsp;பாதிக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தம். நாம் தினமும் இரவில் &nbsp;7 மணி நேரம் தூங்கவேண்டும். இரவு ஒன்பதரைக்கு தூங்கச் சென்று விடவேண்டும். காலை யில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தி ருக்க வேண்டும். &nbsp;காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும். மேலும் கீழும் டூத் பிரஷ் படுமாறு பற்களை நன் &nbsp;றாக விளக்கவேண்டும். அப் பொழுதுதான் பற்களில் மாட்டி யிருக்கும் துகள்கள் வெளியே வரும். பற்களை ஒழுங்காக பாது காக்காவிட்டால் கிருமிகள் அதிக மாகி பூச்சிப் பற்கள் வந்துவிடும். 6 முதல் 12 வயது வரை உள்ள பற் &nbsp;கள் பால் பற்கள். அதற்கு மேல் நிரந்தரமான பற்கள் வந்துவிடும். பற்கள் விழுந்து முளைத்து விட்டால் பூச்சிப் பற்களைச் சரி செய்ய முடியாது. காலையில் பல் &nbsp;துலக்கி விட்டு தண்ணீர் குடிக்க &nbsp;வேண்டும். காலை கடனை முடித்து விட்டு குளிக்க வேண்டும். &nbsp;கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். மேற் &nbsp;புறம், உள்ளங்கை இரு கைகளி லும், இடுக்குகளிலும் சோப்பு போட்டு நன்றாக கழுவவேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கக் கூடாது என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.