முந்தய பக்கம்

சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

11 Mar 2026, 4:32 pm
சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தருமபுரி, மார்ச் 11- பதவி உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு சுகாதார &nbsp;ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர்களின் பதவி உயர்வு கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட முடிவுகளை செயல்படுத்த வேண்டும். தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் என்.எம்.எஸ் மற்றும் &nbsp;டி.எச்.இ போன்ற பணியிடங்களை இல்லாமல் செய் யும் வேலையை கைவிட வேண்டும். சுகாதார ஆய்வா ளர்கள் அமைப்புக்கு எதிராகவும், அலட்சியப்போக்கு டன் செயல்படும் பொது சுகாதாரத்துறை இயக்குந ரகத்தை கண்டித்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி சுகாதாரப் பணி கள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சுகாதார ஆய்வாளர் சங்க &nbsp;மாவட்டத் தலைவர் சி.சண்முகம் தலைமை வகித் தார். பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்டத் &nbsp;தலைவர் எம்.நவநீதகிருஷ்ணன், சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் கே.கரிகாலன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, பொருளாளர் எம்.அன்பழகன், மாநில செயற் குழு உறுப்பினர் என்.தினமணி, சத்துணவு அங்கன் வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சி. காவேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிரே உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத் &nbsp;தலைவர் பி.மணிவண்ணன். மாவட்டத் தலைவர் சி. பிரபாகரன், செயலாளர் எஸ் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்த உரையாற்றினர். இதில், அரசு &nbsp;ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் அர்த்தனாரி உள்ளிட்ட சகோதர சங்க நிர் வாகிகள் வாழ்த்திப் பேசினர். முடிவில், மாநிலப் பொரு ளாளர் செல்வம் நிறைவுரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram