முந்தய பக்கம்

சுகாதார ஆய்வாளர்கள் சங்க பொதுக்குழு

8 Jul 2026, 10:26 pm
சுகாதார ஆய்வாளர்கள் சங்க பொதுக்குழு
<p><strong>சுகாதார ஆய்வாளர்கள் சங்க பொதுக்குழு</strong></p><p>நாமக்கல், ஜூலை 8- காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என வலியு றுத்தி மொபைல் ஆப்மூலம் செய்யும் பணிகள் புறக்கணிப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பி.கார்த்தி தலைமையில் நாமக்கல் தொழிற்சங்க அலுவலகத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. இக்கூட்டத்தை துவக்கி வைத்து சங்க மாவட்டச் செயலாளர் கே.தனசேகரன் பேசினார். பி.பிரபு குமார் வர வேற்புரையாற்றினார். இதில், எதிர்கால இயக்கங்கள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் வி.செல்வம் சிறப்புரை யாற்றினார். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலு சாமி, அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் ஆர்.முருகே சன், இந்நாள் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உள் ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங் களை நிரப்பிட வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 16.7.2026 முதல் மொபைல் ஆப் மூலம் செய்யப்படும் பணி களை புறக்கணிப்பு போராட்டத்தை நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தலைவராக இரவி, செயலாளராக தனசேகரன், பொருளாளராக செல்வகுமார், துணைத்தலை வராக முருகேசன், இணைச் செயலாராக ராஜகணபதி, தணிக்கையாளராக சுந்தரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram