முந்தய பக்கம்

சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

12 Mar 2026, 4:20 pm
சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சுகாதார ஆய்வாளர்கள் பணி உயர்வுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றாத சுகாதாரத்துறை இயக்குநரகத்தை கண்டித்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க சங்கங்களின் கூட்டமைப்பு &nbsp;சார்பில் புதன்கிழமை (மார்ச்11) கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவி,தயாநிதி ஆகியோர் தலைமை வகித்தனர்.தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க மாநில துணைத்தலைவர் தங்கராசு, மாவட்ட துணைத்தலைவர்கள் மதியழகன், ரவி, இணைச் செயலாளர் சரவணராஜ்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் செந்தில்முருகன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் வீரபுத்திரன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிதுரை, ஆகியோர் உரையாற்றினார்கள். பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் &nbsp;மகாலிங்கம் &nbsp;சிறப்புரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram