சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
12 Mar 2026, 4:20 pm
<p><strong>சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தஞ்சாவூர், மார்ச் 12- பதவி உயர்வு கோரி, தஞ்சாவூர் மாவட்டச் சுகாதார அலுவலக வாயிலில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட முடிவுகளைச் செயல்படுத்த மறுப்பது, சுகாதார ஆய்வாளர் நிலை 2 புதிய பணி நியமனத்தில் உரிய அக்கறை செலுத்தாதது உள்பட சுகாதார ஆய்வாளர்கள் பணியமைப்புக்கு எதிராகவும், அலட்சியப் போக்குடனும் செயல்படும் பொது சுகாதாரத் துறை இயக்ககத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். சரண்ராஜ் தலைமை வகித்தார். பொதுசுகாதாரத் துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் எம். இளங்கோவன் விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் அ. சதீஸ், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறைச் சுகாதார ஆய்வாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் வை. ராஜா, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க முன்னாள் மாநிலப் பொதுச்செயலர் எஸ்.ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
