தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூடும் நிலையிலிருந்த அரசுப் பள்ளியை மீட்டெடுத்த தலைமை ஆசிரியர் முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டு!

12 hours before
மூடும் நிலையிலிருந்த அரசுப் பள்ளியை  மீட்டெடுத்த தலைமை ஆசிரியர் முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டு!
<p><strong>மூடும் நிலையிலிருந்த அரசுப் பள்ளியை மீட்டெடுத்த தலைமை ஆசிரியர் முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டு!</strong></p><p>சிதம்பரம், ஜூலை 20– சிதம்பரம் அருகே மூடும் நிலைக்குச் சென்ற ஊராட்சி ஒன்றியத் தொடக் கப் பள்ளியைத் தனது தீவிர முயற்சியால் மீட்டெடுத்து, மாணவர் சேர்க்கையை உயர்த்திய தலைமை ஆசிரி யரின் உணர்வுபூர்வமான செயலுக்குப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் பொதுமக்களும் நேரில் சென்று பாராட்டு தெரிவித் தனர். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியத் ்திற்குட்பட்ட சி. கொத்தங் குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளி யில், கடந்த ஆண்டு வெறும் 7 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். இதனால் பள்ளி மூடும் நிலைக்குச் செல்லும் அபாயம் ஏற்பட் டது. இந்தச் சூழலில், கடந்த ஆண்டு ஈஸ்வரி தலைமை ஆசிரியராகப் பொறுப் பேற்றார். அவர் தளராது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று, அரசுப் பள்ளியின் சிறப்புகள், தர மான கல்வி மற்றும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவி கள் குறித்துப் பெற்றோர் களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்தினார். ஆசிரியரின் இந்தத் தீவிர முயற்சியின் பலனாக, தற்போது பள்ளியில் 7 மாணவர்கள், 11 மாணவி கள் என மொத்தம் 18 பேர் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வருகின்றனர். ஒரு ஆசிரி யருடன் இயங்கி வந்த இப்பள்ளி, மாணவர் எண்ணிக்கைப் உயர்வால் தற்போது 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது. சிறப்பு பட்டங்கள் வழங்கி கௌரவம் தனியார் பள்ளிகளுக்கு இணையான உள்கட்ட மைப்பை உருவாக்க எண்ணிய தலைமை ஆசிரி யர் ஈஸ்வரி, கல்வி வளர்ச்சி நாள் விழாவின் போது கல்வித் துறை அதிகாரி களின் முன்னிலையில் மாணவர்களை ஊக்கப் படுத்தும் விதமாக ‘கொத்த ங்குடி கிராமத்தின் ராஜா, ராணி’ எனச் சிறப்புப் பட்டங்கள் வழங்கி அவர் களைக் கௌரவித்தார். இந்த வினோதமான மற்றும் அன்பான செயல் பெற்றோர் கள் மற்றும் கல்வி ஆர்வல ர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னாள் மாணவர்கள் பாராட்டு &amp; நிதியுதவி தலைமை ஆசிரியரின் இந்தச் சேவையைக் கேள்விவுற்ற அண்ணா மலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் க. மகே ஸ்வரி, அவரது கணவரும் அரசு ஊழியருமான தங்க. கஜேந்திரன் (இருவரும் இதே பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள்) பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் ஈஸ்வ ரிக்குப் பொன்னாடை அணி வித்து வாழ்த்து தெரிவித் தனர். மேலும், பள்ளி வளா கத்தின் வெளிப்புற மணல் தரையைக் கான்கிரீட் தள மாக மாற்றித் தருவதாகவும், சுற்றுச்சுவர், குடிநீர் வசதி களைச் செய்து தருவதா கவும் உறுதியளித்தனர். அத்துடன், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணை யான சீருடைகள், ஷூ, சாக்ஸ், டை ஆகியவற்றைத் சொந்தச் செலவில் வாங்கித் தருவதாகவும் முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.