தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்களித்தால் மட்டுமே நிதி வழங்குவாராம்! பொதுமக்களை மிரட்டும் பாஜக கூட்டணி துணை முதலமைச்சர்

23 Nov 2025, 3:44 pm
வாக்களித்தால் மட்டுமே நிதி வழங்குவாராம்! பொதுமக்களை மிரட்டும் பாஜக கூட்டணி துணை முதலமைச்சர்
<p><strong>வாக்களித்தால் மட்டுமே நிதி வழங்குவாராம்! பொதுமக்களை மிரட்டும் பாஜக கூட்டணி துணை முதலமைச்சர்</strong></p> <p>மும்பை மகாராஷ்டிராவில் பாஜக &nbsp;கூட்டணி ஆட்சி நடைபெற்று &nbsp;வருகிறது. முதலமைச்சராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். துணை முத லமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே &nbsp;(சிவசேனா), அஜித் பவார் (தேசிய வாத காங்கிரஸ்) உள்ளனர். தேசிய வாத காங்கிரஸ் கட்சியை இரண் டாக உடைத்த அஜித் பவாரிடம் நிதித்துறை உள்ளது. &nbsp;இந்நிலையில், மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சா ரக் கூட்டம் மாலேகான் நகரில் உள்ள &nbsp;பாரமதி தாலுகாவில் நடைபெற் றது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அஜித் பவார், &ldquo;ஒன்றிய &nbsp;அரசும், மாநில அரசும் &nbsp;பல திட்டங்களை உருவாகியுள் ளன. நாம் அனைவரும் ஒன்றி ணைந்து இந்தத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தினால், மாலேகானுக்கு நல்ல வளர்ச்சி யை உறுதி செய்ய முடியும். நீங்கள் எங்களின் 18 வேட்பா ளர்களையும் வெற்றி பெறச் செய் தால், நான் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்ற நான் &nbsp;தயாராக இருக்கிறேன். ஆனால் &nbsp;நீங்கள் எனது வேட்பாளர்களை நிரா கரித்தால் (கிராஸ் மார்க்) செய்தால், &nbsp;நானும் புறக்கணிப்பேன். வாக்கு மட்டுமே உங்கள் கையில் உள்ளது. &nbsp;ஆனால் பணம் (நிதி) என் கையில் உள்ளது&rdquo; என பொதுமக்களை பகி ரங்கமாக மிரட்டியுள்ளார். ஒரு மாநிலத்தின் துணை முத லமைச்சராக உள்ள அஜித் பவார் &nbsp;உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சி &nbsp;வேட்பாளர்களுக்கு வாக்களித் தால் மட்டுமே அந்த பகுதிக்கான வளர்ச்சி நிதியை வழங்குவேன் என மிரட்டியுள்ளதற்கு காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) உள்ளிட்ட &ldquo;இந் தியா&rdquo; கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அஜித் பவார் இவ்வாறு பேசி யது முதல்முறை அல்ல. கடந்த &nbsp;ஜனவரி மாதம் மகாராஷ்டிரா &nbsp;தலைநகர் மும்பையில், &ldquo;வாக்க ளித்து விட்டதால் நீங்கள் ஒன்றும் &nbsp;எனக்கு முதலாளிகள் இல்லை. &nbsp;நானும் கூலிக்காரன் அல்ல&rdquo; என &nbsp;சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.