தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பரிசீலிக்கிறாராம்! ஈரான் பதிலடி தாக்குதல் பின்வாங்கும் டிரம்ப்!

21 Mar 2026, 2:42 pm
போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பரிசீலிக்கிறாராம்! ஈரான் பதிலடி தாக்குதல் பின்வாங்கும் டிரம்ப்!
<p><strong>போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பரிசீலிக்கிறாராம்! ஈரான் பதிலடி தாக்குதல் பின்வாங்கும் டிரம்ப்!</strong></p> <p>வாஷிங்டன், மார்ச் 21- ஈரான் சளைக்காமல் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்காத அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப், போரை &nbsp;முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஈரானின் உயர் தலைவர் காமேனி, பாதுகாப்புத்துறை அமைச்சர் உள் ளிட்ட முக்கியத் தலைவர்களை படு கொலை செய்த பிறகு, ஈரான் தன்னிடம் &nbsp;சரணடைந்து விடும் என்று டிரம்ப் கணக்குப் போட்டார். ஆனால், அது &nbsp;நடக்கவில்லை. மாறாக, இஸ்ரேலை யும், சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய &nbsp;அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருக் &nbsp;கும் அமெரிக்க ராணுவத் தளங்களை யும் ஏவுகணைகளை வீசி ஈரான் சர மாரியாகத் தாக்கியது. இஸ்ரேலில், பிர தமர் நேதன்யாகு அலுவலகம் அருகி லேயே ஏவுகணைத் தாக்குதல் நடத்தி &nbsp;அதிர்ச்சி கொடுத்தது. &nbsp;ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியபோது, யாரும் பயப்பட வேண் &nbsp;டாம், நான் பாதுகாப்பு அளிக்கிறேன் என்று டிரம்ப் கூறினார். ஆனால், அமெ ரிக்கா, ஜப்பான் கப்பல்கள் உட்பட 6 கப்பல்களை ஏவுகணைகளால் ஈரான் தாக்கிய போது, டிரம்ப்பால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது. இதனால், ஹோர்முஸ் நீரிணையை மீட்க, நேட்டோ கூட்டணி நாடுகள் அனைத்தையும் டிரம்ப் துணைக்கு அழைத்தார். சீனாவின் உதவியை நாடவும் அவர் வெட்கப்படவில்லை. சீனாதான் ஈரானுக்கு எதிராக வராது என்றால், நேட்டோ நாடுகளும் அமெ ரிக்காவைக் கைவிட்டன. ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய கூட்டாளிகளும் கப்பல்களை அனுப்ப முடியாது என்று &nbsp;கூறி விட்டன. இதனால், நேட்டோ கூட் &nbsp;டணி நாடுகளை கோழைகள் என்று வசைபாடி ஆத்திரமடைந்தார் டிரம்ப். மறுபுறத்தில் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த கே.சி-135 ரகத்தைச் &nbsp;சேர்ந்த 5 எரிபொருள் நிரப்பும் விமா னங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது. எப். 15 ரகத்தைச் சேர்ந்த 3 விமானங்க ளையும் குவைத்தில் தாக்கி அழித் தது. &nbsp;ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் எரி வாயு வயலை இஸ்ரேல் தாக்கிய நிலை யில், அமெரிக்கா ஆதரவு நாடான கத்தா ரின் முக்கிய மற்றும் மிகப் பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலைய மான ராஸ் லாபன் மீது ஈரான் மிகப் பெரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தி பதிலடி கொடுத்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட &nbsp;முக்கிய அமைச்சர்களின் இல்லங்க ளுக்கு மேலே பறக்கவிடப்பட்ட டிரோன் &nbsp;களாலும் வெள்ளை மாளிகை அரண்டு போனது. அதிர்ச்சியடைந்த டிரம்ப், &ldquo;இனி இஸ்ரேல் ஈரானின் தெற்கு பார்ஸ் எண்ணெய் வயல் மீது தாக்குதல் நடத் &nbsp;தாது. ஈரானும் கத்தார் எண்ணெய் வயல் &nbsp;மீது தாக்குதல் நடத்தக் கூடாது&rdquo; என்று &nbsp;சமாதானம் பேசினார். அப்படியும் ஈரான் விடுவதாக இல்லை. ரேடார்களில் சிக்காத அமெ ரிக்காவின் திறன் வாய்ந்த, அதிநவீன எப்-35 ரக போர் விமானத்தையும் சுட்டு &nbsp;வீழ்த்தி பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இதனால், தரைப்படையை இறக்கப் போவதாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அப்படி தரைவழி தாக்குதலுக்கு முயன் &nbsp;றாலும் வழக்கம்போல அதிர்ச்சிகர மான பதிலடி உறுதி என்று ஈரான் எச்ச ரித்தது. இதனிடையே கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த, கட லில் முடங்கியுள்ள ஈரானிய எண்ணெய் &nbsp;மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்கு வதாக அமெரிக்கா சலுகை காட்டி யது. அப்போதும், &ldquo;சர்வதேச சந்தை களுக்கு அனுப்ப எங்களிடம் புழக்கத் தில் உள்ள கச்சா எண்ணெய்யோ அல்லது உபரி எண்ணெய்யோ கை யிருப்பில் இல்லை&rdquo; என்று கூறி, அமெ ரிக்காவின் சலுகையை அமெரிக்காவே வைத்துக் கொள்ளட்டும் என்ற ரீதியில் &nbsp;ஈரான் பதிலடி கொடுத்தது. &nbsp;இந்நிலையில் தான், ஈரானின் பயங்கரவாத ஆட்சி தொடர்பாக மத்திய &nbsp;கிழக்கில் அமெரிக்காவின் மாபெரும் ராணுவ முயற்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேநேரம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, &ldquo;அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதி யில் ராணுவ நடவடிக்கைகளை குறைக் &nbsp;கும் யோசனையில் இருந்தாலும், போர்நிறுத்தம் குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை!&rdquo; என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, பாரசீக &nbsp;புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு அனுப்பிய செய்தியில், மூன்று வாரங்க ளாக நீடித்து வரும் மேற்கு ஆசியப் &nbsp;போரில் எதிரிகளுக்கு ஒரு &ldquo;தலைசுற்ற &nbsp;வைக்கும் அடியை&rdquo; கொடுத்திருப்ப தாகவும், தாங்கள் தொடர் மோதல் களுக்கு மத்தியில் ஏவுகணைகளைத் தயாரித்து வருவதுடன், ஏவுகணை மேம்பாட்டுப் பணிகளைத் தொடர்வதோடு, உலகளாவிய சுற்று லாத் தலங்கள் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்குப் பாது காப்பற்றவை என்றும் எச்சரித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.