தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளிகளில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

9 Jul 2026, 9:11 pm
பள்ளிகளில் முதல்வர்  பிறந்த நாள் கொண்டாட்டம்? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
<p><strong>பள்ளிகளில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு</strong></p><p>சென்னை, ஜூலை 9 - முதலமைச்சர் விஜய்யின் 53-ஆவது பிறந்தநாள் விழா, கடந்த ஜூன் 22 அன்று, தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது, தவெக கட்சியினர் கட்சிக் கொடி, சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும், சில பள்ளிகளில் மாணவர்கள் முதலமைச்சர் விஜய் படத்தின் பாடலைப் பாடி வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும் வழக்கறிஞரு மான கவி கணேசன் மனுத் தாக்கல் செய்திருந்தார். பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது திருவள்ளூர் மாவட்டத்தில் தவெக தலைவரின் முகவடிவில் 3,000 மாணவர்களை வெயிலில் அமரச் செய்ததாகவும், மாணவர்களை அரசியல் கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்துவது கல்வி நிறுவனங்களின் நோக்கத்துக்கு விரோதமானது எனவும் மனுவில் அவர் கூறியிருந்தார். கல்வி நிறுவனங்களில் அரசியல், மதச் சித்தாந்தம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தமிழக அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, மனுவிற்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.