தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தலில் மத அடையாளங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு வழக்கின் விசாரணையை எதிர்கொள்ள சுரேஷ் கோபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

2 Apr 2026, 5:30 am

திருச்சூர் மக்களவைத் தேர்தலில் மத அடையாளங்களைப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சுரேஷ் கோபி எதிர்கொள்ள வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுரேஷ் கோபியின் எம்பி பதவியை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரிய சுரேஷ் கோபியின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மதச் சின்னங்களைப் பயன்படுத்தி வாக்காளர்களைத் திசைதிருப்ப முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.