முந்தய பக்கம்

ரயில்–நடைமேடை இடைவெளி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

yesterday
ரயில்–நடைமேடை இடைவெளி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ரயில்–நடைமேடை இடைவெளி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை, நவ. 13 -மதுரையைச் சேர்ந்த ஜஹாங்கீர் பாதுஷா, 2025-இல் தாக்கல் செய்த மனுவில், ரயில் - நடைமேடை இடைவெளியில் பயணிகள் தவறி விழுந்து உயிரிழப்பதும் காயமடைவதும் அடிக்கடி நிகழ்வதாகவும்,

2022 மார்ச் மாத நிலவரப்படி இத்தகைய விபத்து களில் 41,596 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியான தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல நாட்டின் அனைத்து ரயில் நிலைய நடைமேடைகளையும் இடைவெளி இல்லாதவாறு சீரமைக்கவும், வைஃபை வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் யோசனையைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக ரயில்வே தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

எனினும், இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram