ரூ.62.5 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
29 Nov 2025, 4:58 pm
<p><strong>ரூ.62.5 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்</strong></p>
<p>சென்னை, நவ.29 - எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வா ளர் செபஸ்டின் மற்றும் உதவி ஆய்வாளர் கணே சன் தலைமையிலான ரயில்வே போலீசார் வெள்ளியன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் சோ தனையில் ஈடுபட்டிருந்த னர். காக்கி நாடாவி லிருந்து செங்கல்பட்டு செல்லும் சர்க்கார் விரைவு ரயிலில் இறங்கிய இளை ஞர் ஒருவரை சந்தேகத் தின் அடிப்படையில் விசா ரணை செய்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லூ ரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கௌதம் என்பது தெரிய வந்தது. ஹவாலா கும்பல், ரூ.62.5 லட்சம் பணத்தை எழும்பூரில் ஒப்படைத் தால் ரூ.3 ஆயிரம் தருவ தாக கூறியதாக அவர் தெரிவித்தார். போலீசார் பிடித்தால், சவுகார்பேட் டையில் உள்ள நகை கடையில் நகை வாங்கு வதற்காக கொண்டு வந்த தாக சொல்லுமாறு கும்பல் கூறியதாகவும் தெரி வித்தார். வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணமும் மாணவரும் ஒப்படைக்க ப்பட்டுள்ளனர். பணம் கொடுத்து அனுப்பியது யார், யாரிடம் கொடுக் கப்பட உள்ளது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படு கிறது.</p>
