தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓராண்டில் 27 லட்சம் வாக்காளர்கள் இறந்து விட்டார்களா?

21 Dec 2025, 3:21 pm
ஓராண்டில் 27 லட்சம் வாக்காளர்கள் இறந்து விட்டார்களா?
<p><strong>ஓராண்டில் 27 லட்சம் வாக்காளர்கள் இறந்து விட்டார்களா?</strong></p> <p>தேனி, டிச.21- &nbsp;தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் &nbsp;சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்ட தாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள புள்ளிவிவரம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்து வதாகவும், இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. &nbsp;சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், கிராமப்புற &nbsp;ஏழைகளின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, டிச. 24 ஆம் தேதி &nbsp;நடைபெறும் மதச்சார்பற்ற கட்சிகளின் போராட் டத்தில் பொதுமக்கள் சக்தியாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்து உள்ளார். வாக்காளர் பட்டியல் நீக்கமும் எஸ்.ஐ.ஆர் சர்ச்சையும் பெரியகுளத்தில் ஞாயிறன்று செய்தியாளர் களைச் சந்தித்த பெ. சண்முகம், வாக்காளர் &nbsp;சுருக்கத் திருத்தப் பணி என்பது வாக்காளர்களைச் &nbsp;சேர்க்கப் பயன்படாமல், அவர்களை நீக்கவே &nbsp;பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார். &nbsp;தமிழகத்தில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது &nbsp;அதிர்ச்சியளிக்கிறது. இதில் 27 லட்சம் பேர் இறந்ததாகக் கூறப்படுவது சாத்தியமற்றது; ஏனெனில் தமிழகத்தில் கொத்து கொத்தாக மக்கள் இறக்க எந்தப் பெரும் தொற்றும் ஏற்படவில்லை. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டிய தேர்தல் &nbsp;ஆணையம், பெயர்களை நீக்குவதிலேயே குறியாக உள்ளது. குறிப்பாக, பாஜகவிற்கு வாக்களிக்காத கம்யூனிஸ்ட்கள் மற்றும் சிறு பான்மையினரின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப் பட வாய்ப்புள்ளது. எனவே, எஸ்.ஐ.ஆர் (SIR) &nbsp;நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். &nbsp;இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அன்றாடம் மத &nbsp;பதற்றத்தை உருவாக்கும் வகையில் சட்ட விரோதத் தீர்ப்புகளை வழங்கி வருகிறார்; அவர் &nbsp;மீது உரிய நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத் &nbsp;தலைமை நீதிபதியிடம் சிபிஎம் சார்பில் புகார் &nbsp;அளிக்கப்பட்டுள்ளது என்றும் பெ. சண்முகம் தெரிவித்தார். செவிலியர் போராட்டம் கடந்த 4 நாட்களாகப் போராடி வரும் செவி லியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையில் தமிழக முதலமைச்சர் நேரில் தலையிட்டுத் தீர்வு &nbsp;காண வேண்டும். ஏழைகளின் உணவான முட்டை விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசு &nbsp;நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தினார். தலைவர்கள் படத்திறப்பு முன்னதாக, பெரியகுளம் சிபிஎம் அலுவல கத்தில் மறைந்த மூத்த தலைவர்கள் எஸ்.ஏ. ரஜாக், ஜி. முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 16 தலை வர்களின் உருவப் படங்களை பெ. சண்முகம் &nbsp;திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக் குத் தாலுகா செயலாளர் எம்.வி. முருகன் தலைமை வகிக்க, மாவட்டச் செயலாளர் எம். &nbsp;ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கட்சியின் &nbsp;மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ. லாசர் ஆகியோர் தலைவர்களின் தியாகப் பணிகளை நினைவு கூர்ந்தனர். இவ்விழாவில் திமுக உயர்நிலைச் செயல் திட்டக்குழு உறுப்பினர் எல். மூக்கையா, மருத்து வர் ஜி. ராஜேஸ்வரன், காபி விவசாயிகள் சங்க &nbsp;மாநிலச் செயலாளர் எம். செல்லையா, மூத்த &nbsp;தலைவர் கே. ராஜப்பன், முன்னாள் மாவட்டச் &nbsp;செயலாளர் ஏ.வி. அண்ணாமலை ஆகியோர் &nbsp;பங்கேற்றனர். மேலும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் டி.வெங்கடேசன், டி.கண்ணன், எஸ். வெண்மணி, ஜி.எம். நாகராஜன், இ.தர்மர், சி. முனீஸ்வரன், விதொச மாவட்டச் செயலாளர் எல்.ஆர். சங்கரசுப்பு, ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் பி.பாலுச்சாமி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஜி. சண்முகம், மின் ஊழியர் அமைப்பின் எஸ். ராமச்சந்திரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 50 ஆயிரம் ரூபாய் கட்சி நிதி யாக வழங்கப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பி னர் மதன்குமார் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.