ஹவானாவில் கியூப ஆதரவு சர்வதேச மாநாடு
6 May 2026, 10:41 pm
<p><strong>ஹவானாவில் கியூப ஆதரவு சர்வதேச மாநாடு</strong></p><p>அமெரிக்காவின் ஏகாதிபத்திய அச்சுறுத்தல்கள் மற்றும் பல பத்தாண்டுகளாகத் தொடரும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், கியூபா சர்வதேச சமூகத்தில் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், தலைநகர் ஹவானாவில் பிரம்மாண்டமான சர்வதேச ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. “பிடலுடன் 100 ஆண்டுகள்” (100 Years with Fidel) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரண்டு நின்றன. (செய்தி : 5)</p>
