தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புப் பேச்சு கண்காணிக்கப்படுகிறது

12 Apr 2026, 5:30 am
சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புப் பேச்சு கண்காணிக்கப்படுகிறது

சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புப் பேச்சு கண்காணிக்கப்படுகிறது

விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

நாகர்கோவில், ஏப்.11- கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.04.2026 அன்று நடைபெறுவதாக 15.03.2026 அன்று அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் 09.04.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், சமூகஊடக வியலாளர்களின் செயல்பாடுகள், சமூகஊடக கணக்குகளான டிவிட்டர், face book, Instagram, YouTube உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் சமூக ஊடக கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறுபவர்களில் இதுவரை கண்டறியப்பட்ட காணொளிகளில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பாக மற்ற வேட்பாளர்களின் மரியாதையை பாதிக்கும் வகையில் சில நபர்கள் வெளியிடுகிறார்கள். இவ்வாறாக அவதூறு பரப்பும் வீடியோக்கள் கண்டறியப்பட்டு மாவட்ட காவல் துறையின் Social Media team-க்கு அனுப்பப்பட்டு FIR/CSR பதிவு செய்யப்பட்டு பின்னர் தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்த காட்சிகள் நீக்கம் செய்யப்படுகிறது. எனவே சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் தகவல்கள் உண்மையாக இருக்கும் நிகழ்வில் மட்டும் பகிரப்பட வேண்டும்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தினால் வெறுப்புப் பேச்சு, தவறான தகவல், போலிச் செய்திகள் வெளியிடுபவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பிரிவு 123(3A), மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக பின்வருபவை ஊழல் நடைமுறைகளாகக் கருதப்படும் - (3A) ஒரு வேட்பாளரின் தேர்தல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக அல்லது எந்தவொரு வேட்பாளரின் தேர்தலையும் பாதகமாக பாதிக்கும் நோக்கத்திற்காக, ஒரு வேட்பாளர் அல்லது அவரது முகவர் அல்லது வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவரின் ஒப்புதலுடன் வேறு எந்த நபர் மதம், மதம், இனம், சாதி, சமூகம் அல்லது மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய குடிமக்களின் வெவ்வேறு வகுப்பினரிடையே பகைமை அல்லது வெறுப்பு உணர்வுகளை ஊக்குவித்தல் அல்லது ஊக்குவிக்க முயற்சித்தல் ஆகியவற்றை மேற்கொள்பவர்கள் மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.