தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரதமர் பதவியும் ‘அவுட்சோர்சிங்’ விடப்பட்டுவிட்டதா?

16 Feb 2026, 2:37 pm
பிரதமர் பதவியும் ‘அவுட்சோர்சிங்’ விடப்பட்டுவிட்டதா?
<p><strong>பிரதமர் பதவியும் &lsquo;அவுட்சோர்சிங்&rsquo; விடப்பட்டுவிட்டதா?&nbsp;</strong></p> <p>பெ.சண்முகம் காட்டமான கேள்வி கள்ளக்குறிச்சி, பிப்.16- &nbsp;&ldquo;இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்தான் அறிவிக்கிறார்; பிரதமர் மோடி மௌனம் காக்கிறார். பாஜக ஆட்சி யில் பிரதமர் பதவியும் &lsquo;அவுட் சோர்சிங்&rsquo; விடப்பட்டு விட்டதா?&rdquo; எனச் சிபிஎம் மாநி லச் செயலாளர் பெ.சண்முகம் காட்டமாகக் கேள்வி எழுப்பி யுள்ளார். &nbsp;கள்ளக்குறிச்சி மந்தை வெளியில் ஞாயிற்றுக்கிழ மை நடைபெற்ற தேர்தல் &nbsp;நிதியளிப்பு அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத் தில் அவர் பேசியதாவது: &ldquo;அமெரிக்கப் பொருட் களுக்கு இந்தியா பூஜ்ஜியம் சதவீத வரி விதிக்கிறது; ஆனால் இந்தியப் பொருட் களுக்கு அமெரிக்கா 18 சத வீத வரி விதிக்கிறது. இது உள்நாட்டு உற்பத்தியாளர் களைப் பாதிக்கும். தமிழ கத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாஜக துரோகம் செய்கிறது. இதற்குத் துணை &nbsp;போகும் அதிமுக, தமிழ கத்திற்குப் பெரும் கேடு. பெண்களுக்கான உரி மைத் தொகை கிடைக்கக் கூடாது எனத் தவெக தலை வர் ஆதவ் அர்ஜுனா நீதி மன்றம் செல்கிறார். ஏழைப் பெண்களுக்கு எதிரான நிலை எடுக்கும் விஜய், எப்படி மக்களைக் காப்பாற்றுவார்? &nbsp;மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் மக்கள் நலனுக்கு எதி ராக நின்றதில்லை. மதவெறி யைத் தூண்டும் பாஜக வினர் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு மெத்தனமாக இருக்கக் கூடாது&rdquo; என வலியுறுத்தி னார். மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி பேசுகையில், கள்ளக்குறிச்சி உழைப்பாளி மக்கள் அளித்த ரூ.26 லட்சம் நிதியே கட்சியின் பலத்திற்குச் சாட்சி என்றார். மாவட்டச் செயலாளர் டி. எம்.ஜெய்சங்கர் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத் தில், வட்டச் செயலாளர் வெ. ஏழுமலை வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஆனந்தன், பி.சுப்பிரமணியன் உரை யாற்றினர். டி.ஏழுமலை, எம்.கே.பூவராகன், மா.செந் தில், இ.அலமேலு, ஜெ.ஜெயக்குமார், எம்.கே.பழனி, வி.ரகுராமன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஜிக்கிரியா நன்றி கூறினார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.