முந்தய பக்கம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் பணியிடை நீக்கம்

11 Jun 2026, 4:25 pm
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் பணியிடை நீக்கம்
<p>கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நீட், கியூட், சிபிஎஸ்இ உள்ளிட் தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 6 ஆம் தேதி தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.</p><p>இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பேரிய ஹரியானவை சேர்ந்த ஆசிரியர் சுலேகா தலால், இது ஒரு வாழ்வா சாவா போராட்டம். இப்போது கரப்பான் பூச்சியின் தாய் களத்தில் இறங்கிவிட்டாள். நாம் நம் பிள்ளைகளுடன் இருக்கிறோம் என்று ஆவேசமாகப் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.</p><p>இதனையடுத்து, ஆசிரியர் சுலேகா தலால்-யை ஜூன் 8 முதல் பணியிடை நீக்கம் செய்வதற்கான உத்தரவை ரோத்தக் மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்தார்.இருப்பினும், அந்த உத்தரவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை.போராட்டத்தில் பங்கேற்றதற்காக பாஜக அரசு ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram