தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஹரியானா கிராமப்புற தூய்மைப் பணியாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம்

29 May 2026, 10:03 pm
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஹரியானா கிராமப்புற தூய்மைப் பணியாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஹரியானா கிராமப்புற தூய்மைப் பணியாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம்

19 ஆண்டுகால உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக வீதிக்கு வந்த 11,000 தொழிலாளர்கள்

வேலைநிறுத்தம் 41

ரோதக், மே 29- தொழிற்சாலை உற்பத்தி ஆலை களையும் பொதுத்துறை நிறுவனங் களையும் தொடர்ந்து, வடஇந்தியா வில் தொழிலாளர் வர்க்க எழுச்சியின் அலைகள் தற்போது கிராமப்புற மக்க ளின் பொது சுகாதாரத்தைப் பாதுகாக் கும் அடிமட்ட உழைப்பாளர்களையும் எட்டியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் 11,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற தூய்மைப் பணியாளர்கள், தங்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளுக்காக கடந்த மே 15 முதல் மாநிலம் தழுவிய அளவில் மாபெ ரும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கிராமப்புறத் தூய்மைப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

இந்திய தொழிற்சங்க மையத்தின் ஹரியானா மாநிலக் குழுவுடன் இணை க்கப்பட்ட ‘கிராமப்புற தூய்மைப் பணி யாளர்கள் சங்கம்’ (Rural Sanitation Workers Union) இந்தத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன் னெடுத்து வருகிறது.

கிராமங்களின் சுகாதாரக் கட்டமைப்பின் முதுகெலும் பாக விளங்கும் தங்களை, கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அரசு எவ்வித பணிப் பாதுகாப்போ முறையான ஊதியமோ தராமல் மிகக் கொடூரமாக வஞ்சித்து வருவதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்ற னர்.

தூய்மைப் பணியாளர்கள் சங்க த்தின் மாநிலத் தலைவர் பசாவ் ராம் இதுகுறித்துத் தெரிவிக்கையில், தொழி லாளர்கள் மிகவும் கடினமான மற்றும் அச்சுறுத்தலான சூழலில் அத்தியாவசி யப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்ட போதிலும், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கமும் நிர்வா கமும் தங்களின் அலட்சியப் போக்கையே நீடித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

காற்றில் பறக்கவிடப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வினோத் குமார் இதுகுறித்துத் தெரி விக்கையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் பணியாற்றி வரும் தற்காலிகத் தூய்மைப் பணி யாளர்களை உடனடியாகப் பணி நிரந்த ரம் செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்றம் மிகத் தெளிவான உத்தரவு களைப் பிறப்பித்திருந்தது.

ஆனால், இந்த நீதிமன்ற உத்தரவுகளை அமல் படுத்தாமல் ஹரியானாவை ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுத் தாமதப்படுத்தி வருகிறது.

மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, கிராமப்புறங்களில் 1,000 மக்கள் தொகைக்கு ஒரு தூய்மை பணியாளர் வீதம் நியமிக்கப்படுவார் கள் என அப்போதைய முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

ஆனால், இந்த அறி விப்பு வெறும் காகிதத்தோடு நின்றதால் தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 9,700 தூய்மைப் பணியாளர் பணி யிடங்கள் காலியாகக் கிடக்கின்றன.

இதனால் இருக்கும் குறைந்த எண்ணி க்கையிலான தொழிலாளர்கள் மீது அதீத வேலைப்பளு திணிக்கப்படுகிறது. முதலமைச்சரின் பொய் வாக்குறுதிகளும் ஏமாற்றப்பட்ட தொழிலாளர்களும் மாநில அரசு தங்களுக்குச் செய்த துரோகங்களை அடுக்கிக் கூறும் தொழிலாளர்கள், கடந்த 2024 நவம்பர் 24 அன்று கிராமப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக 26,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பகிரங்கமாக அறி வித்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, 2025 ஜூன் 11 அன்று மேலும் 2,100 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அறி விக்கப்பட்டது.

ஆனால், இந்த இரண்டு முக்கிய அறிவிப்புகளுமே இதுவரை அரசாணையாக வெளியிடப்படாமல் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த டிசம்பர் 8 அன்று நடைபெற்ற முத்தரப்புப் பேச்சு வார்த்தையின்போது, தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்து வதற்கான தனிப் பாதுகாப்புக் கொள்கை (Regularisation Policy) வகுக்கப்படும் என அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான உறுதியும் நிறை வேற்றப்படவில்லை. இந்தத் தொடர் ஏமாற்றங்களின் பின்னணியில்தான், வேறு வழியின்றித் தொழிலாளர்கள் இந்த நேரடிப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கும் நியாயமான கோரிக்கைகளும் கடந்த 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில், ஹரியானாவில் ஒருமுறை கூடத் தூய்மைப் பணியாளர்களுக்கோ அல்லது கழிவுநீர்க் கால்வாய் தொழி லாளர்களுக்கோ முறையான நிரந்த ரப் பணி நியமனங்கள் வழங்கப்பட வில்லை என்று சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் ஜோகிந்தர் சிங் சாடியுள்ளார்.

இது இம்மாநில அரசின் தீவிரமான தொழிலாளர் விரோதப் போக்கையும், உழைப்பாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க மறுக்கும் கார்ப்பரேட் சார்பு நிலைப்பாட்டையுமே காட்டுகிறது.

தங்களின் வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் தூய்மைப் பணியாளர்கள் சங்கம் மற்றும் சிஐடியு அமைப்பின் முதன்மைக் கோரிக்கையாக, 31 டிசம்பர் 2025 தேதியிட்ட உயர்நீதி மன்ற உத்தரவின்படி, அனைத்துத் தற்காலிகத் தூய்மைப் பணி யாளர்களையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய முறையான கொள்கை யை வகுக்க வேண்டும் என்பது முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் வேலைப்பளுவை குறைக்க 400 மக்கள் தொகைக்கு ஒரு தூய்மைப் பணியாளர் என்ற வீதத்தில் புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், முதலமைச்சரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 26,000 ரூபாய் அடிப்படை மாத ஊதி யத்தை உடனடியாக நிலுவைத் தொகையுடன் அமல்படுத்த வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரு கின்றனர்.

அத்துடன், பணியின் போது தொழிலாளர்கள் மரணமடைந்தால், அவர்களின் குடும்பத்தினருக்குக் கால முறை கருணை அடிப்படையிலான பணி வழங்குவதோடு, 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற சமூகப் பாதுகாப்புக் கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தங்களின் நியாயமான கோரிக்கை களுக்கு அரசு உடனடியாகச் செவிசா ய்க்காவிட்டால், அடுத்தகட்டமாகக் காலவரையற்ற மாபெரும் போரா ட்டமாக மாற்றப்படும் எனச் சங்கத்தின் இணைச் செயலாளர் தேவி ராம் எச்ச ரித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, மாநில அமைச்சர்கள் மற்றும் முத லமைச்சரின் இல்லங்களை முற்றுகை யிடும் அதிரடிப் போராட்டங்களை நடத்த தொழிலாளர் வர்க்கம் தயாராகி வருகிறது.

தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.