தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஹரியானாவில் 30,000 நகராட்சித் தொழிலாளர்களின் 14 நாள் தொடர் வேலைநிறுத்தம் வெற்றி

25 May 2026, 10:11 pm
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஹரியானாவில் 30,000 நகராட்சித் தொழிலாளர்களின் 14 நாள் தொடர் வேலைநிறுத்தம் வெற்றி

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஹரியானாவில் 30,000 நகராட்சித் தொழிலாளர்களின் 14 நாள் தொடர் வேலைநிறுத்தம் வெற்றி

பணி நிரந்தரக் கோரிக்கைகளை ஏற்றது பாஜக மாநில அரசு!

ரோதக், மே 25 - ஹரியானா மாநிலத்தின் பல்வேறு தொழில்சார் மண்டலங்களில் ஒப்பந்த முறைக்கு எதிராகத் தொழிலாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களின் அடுத்தகட்டமாக, நகராட்சி மற்றும் தூய்மைப் பணியாளர்களின் கல கக்குரல் பாஜக மாநில அரசைப் பணிய வைத்துள்ளது.

‘சர்வ கரம்சாரி சங்க்’ அமைப்போடு இணைக்கப்பட்ட ஹரியானா நகராட்சி ஊழியர்கள் சங்க த்தின் பதாகையின்கீழ், சுமார் 30,000 நகராட்சி மற்றும் தீயணைப்புத் துறை ஊழியர்கள் தங்களின் வாழ்வாதார உரி மைகளுக்காக நடத்திய 14 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம், மே 14 அன்று அரசின் உடன்பாட்டு டன் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

இத்தொடரின் 33-ஆவது பகுதியில், இந்த வர்க்கப் போராட்டத்தின் வெற்றியை விரி வாகக் காண்போம்.

சர்வதேச தொழிலாளர் தினமான மே 1, 2026 அன்று ஹரியானா மாநி லத்தின் ரோதக், குருகிராம், ஹிசார், பானிபட் மற்றும் பரிதாபாத் உள்ளிட்ட அனைத்து முக்கிய மாநகராட்சிகள், நகராட்சிகளின் தூய்மை மற்றும் பொதுச்சேவை ஊழியர்கள் இந்த கால வரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

இவர்களுடன் கடந்த ஏப்ரல் 8 முதல் போராடி வந்த தீய ணைப்புத் துறை ஊழியர்களும் கரம் கோர்த்தனர்.

நகரங்களை உலுக்கிய தூய்மைப் பணி முடக்கம் ஈரப்பதம் மற்றும் கோடை வெப்பம் உச்சத்தில் இருந்த சூழலில், 14 நாட்கள் நீடித்த இந்த வேலை நிறுத்தத்தால் மாநிலம் முழுவதும் நகர்ப்புறத் தூய்மைப் பணிகள் முற்றிலு மாக முடங்கின.

வீடுகள்தோறும் குப்பைகளைச் சேகரிக்கும் பணி நிறுத்தப்பட்டதால், முக்கியச் சாலை களிலும் தெருக்களிலும் டன் கணக்கில் குப்பைகள் தேங்கிக் கடுமையான துர்நாற்றம் வீசியது.

டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்ப் பரவல் அபா யம் அதிகரித்ததால் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கும் கடுமையான அழுத்தம் உருவானது.

மாற்று ஏற்பாடாகத் தனியார் டிராக்டர்கள் மூலம் குப்பைகளை அள்ள அரசு முயன்றபோது, கோப மடைந்த தொழிலாளர்கள் பல இடங்களில் அதற்குத் தடையாக இருந்து தங்களின் வர்க்க எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

“எங்களின் நோக்கம் பொதுமக்களுக்கு இன்னல் விளை விப்பதல்ல, 2018 முதல் கிடப்பில் போடப்பட்டுள்ள எங்களின் நியாய மான கோரிக்கைகளை வென்றெடு ப்பதே” என்று தொழிலாளர் சங்கத் தலைவர் சிவச்சரண் தெளிவுபடுத்தி னார்.

தேர்தல் வாக்குறுதி மீறல்களும் அடக்குமுறைகளும் பாஜக மாநில அரசு தனது 2014 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்கு றுதியின்படி, 25 முதல் 30 ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணி யாற்றும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை என்று நகராட்சி ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மாங்கேராம் திக்ரா குற்றம் சாட்டினார்.

மேலும், ஒப்பந்த முறையை ஒழிக்க 2022-இல் அரசாணை வெளியிட்ட பிறகும், பாதாளச் சாக்கடை தூய்மைப் பணி களில் ஒப்பந்த உழைப்புச் சுரண்டல் தொடர்வதாகவும், இதற்கு எதி ராகக் குரல் எழுப்பிய குருகிராம் தொழி லாளர்கள் 3,480 பேர் உட்படப் பல தலைவர்கள் பழிவாங்கும் நோக்கில் பணிநீக்கம் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

6 மணி நேரப் பேச்சுவார்த்தையும் எட்டப்பட்ட உடன்பாடுகளும் பொதுமக்களின் அழுத்தம் காரணமாக, மே 13 அன்று சண்டிகரில் நகராட்சி நிர்வாக அமைச்சர் விபுல் கோயல் தலைமையில் 6 மணி நேரம் நீடித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எட்டப்பட்ட முக்கிய உடன்பாடுகள்:

* பணி நிரந்தரம்: நகராட்சிப் பணி களில் உள்ள 13,000 தற்காலிக ஊழி யர்களும், 55 வயது வரை வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டு விதி முறைகளின்படி பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

* பணிநீக்கம் ரத்து: குருகிராமில் நீக்கப்பட்ட 3,480 ஊழியர்கள் உட்பட மாநிலம் முழுவதும் பழி வாங்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவர்; தலைவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும்.

* ஆபத்தான பணிக்கான படி மற்றும் ஊதியம்: பாதாளச் சாக்கடைத் தொழி லாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு ₹5,000 அபாயப் படி (Risk Allowance) வழங்கப்படும்.

ஒப்பந்த ஊழியர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியமாக ₹15,220 உறுதி செய்யப்பட்டு, இடைத்தரகர்களைத் தவிர்க்கச் சம்பளம் நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.

* இழப்பீடு: பணியின் போது மரணமடை யும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரையும், பரிதாபாத் தீ விபத்தில் பலியான இரு வீரர்களின் குடும்பங் களுக்குத் தலா ₹50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.

தற்போதைய கள நிலவரம் அரசின் இந்த எழுத்துப்பூர்வமான முன்மொழிவுகளைத் தொடர்ந்து, மே 14 அன்று ரோதக்கில் நரேஷ் குமார் சாஸ்திரி தலைமையில் கூடிய நகராட்சி ஊழியர்களின் மாநாட்டில், பொதுமக்க ளின் நலன் கருதி வேலைநிறுத்தப் போராட்டம் வரும் ஜூன் 30, 2026 வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக ஒருமனதாக அறிவிக்கப் பட்டது.

எனினும், “அங்கீகரிக்கப்பட்ட இக்கோரிக்கைகளுக்கான அதிகாரப் பூர்வ அரசாணையை ஜூன் 30-க்குள் மாநில அரசு வெளியிடத் தவறினால், வரும் ஜூலை 1, 2026 முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம் வெடிக்கும்” என்று சங்கத் தலைவர் நரேஷ் குமார் சாஸ்திரி எச்சரித்துள் ளார்.

தொழிலாளர்களின் இந்த தற்கா லிகப் பின்வாங்கல் என்பது, தங்களின் உரிமைகளை முழுமையாகப் பெறும் வரை அரசை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கான ஒரு வர்க்க உத்தியே ஆகும். தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.