ஹரியானா மானேசர் தொழிலாளர் எழுச்சி தொழிற்சங்கத் தலைவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
28 May 2026, 10:02 pm

ஹரியானா மானேசர் தொழிலாளர் எழுச்சி தொழிற்சங்கத் தலைவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலைநிறுத்தம் 40

மானேசர், மே 28 உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ் தான் மாநிலங்களைத் தொடர்ந்து, வடஇந்தியாவின் முதன்மையான தொழில் மையமான ஹரியானாவின் குருகிராம்-மானேசர் மண்டலத்திலும் கார்ப்பரேட்-அரசு கூட்டணியின் ஒடுக்கு முறைகளை முறியடித்து தொழிலாளர் வர்க்கம் மாபெரும் சட்டப் போராட்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

தொழி லாளர்களின் நியாயமான கூலி உயர்வுப் போராட்டத்தை “கொலைச் சதி” என்று சித்தரித்து, தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பொய் வழக்குகளை ஏவிய ஹரி யானா காவல்துறையின் முகத்திரை யைக் கிழித்து, மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தொழிற்சங்கத் தலைவர் களுக்கு ஜாமீன் வழங்கி உத்தர விட்டுள்ளது.

மானேசர் தொழில் மண்டலத்தில் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வெடித்த வீரம் செறிந்த தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்க நினைத்த ஹரியானா காவல்துறை, ஏப்ரல் 9 அன்று தொழிலாளர்கள் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்தது.

இதில் எப்ஐஆர் எண் 95/2026-ன் கீழ் 20 பெண் தொழி லாளர்கள் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டு ஏற்கெனவே ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், எப்ஐஆர் எண் 94/2026-ன் கீழ் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) கொலை முயற்சி, கிரிமினல் சதி உள்ளிட்ட 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய கடுமையான பிரிவு களின் கீழ் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

நள்ளிரவுக் கைதும் அம்பலமான போலீஸ் சதியும் இவ்வழக்கில் ஏப்ரல் 9 அன்று 11 தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து, மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நள்ளிரவில் காவல் துறையினர் அதிரடி வேட்டை நடத்தி 6 தொழிற்சங்கச் செயல்பாட்டாளர் களைக் கைது செய்து, அவர்கள்தான் வன்முறைக்குக் காரணமான முதன்மைக் குற்றவாளிகள் எனச் சித்தரித்தனர்.

இவர்களில் ‘பால்சோனிகா யூனியன்’ (Balsonica Union) பொதுச் செயலாளர் அஜித் குமார் மற்றும் அங்கித் ஆகியோருக்கு குருகிராம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி யுள்ளது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான பிரபல மனித உரிமை வழக்கறிஞர் பிருந்தா குரோ வர் நீதிமன்றத்தில் வாதிடுகையில்: “வன்முறை நடந்ததாகக் கூறப்படும் நாளில் குற்றம் சாட்டப்பட்ட தொழி லாளர் தலைவர்கள் யாரும் அந்த இடத்தில் இருக்கவில்லை.

அப்பட்ட மான உழைப்புச் சுரண்டலுக்கு எதி ராகப் பேசியவர்களைப் பழிவாங்கும் நோக்கில், எவ்வித சட்டப்பூர்வக் காரணங்களையும் தெரிவிக்காமல், குடும்பத்தினருக்கோ அல்லது வழக்கறிஞர்களுக்கோ தகவல் தராமல் இந்த நள்ளிரவுக் கைதுகள் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளன” எனச் சாடினார்.

காவல்துறையைக் கண்டித்த நீதிமன்றத்தின் வரலாற்று முழக்கம் தொழிலாளர்கள் தரப்பில் நியாய மான ஊதியம் மற்றும் உரிமைகள் குறித்துப் பேசிய பொதுக்கூட்ட வீடி யோக்களை ஆதாரமாகத் தாக்கல் செய்து, அவர்களைத் தொடர்ந்து காவ லில் வைக்கக் கோரிய காவல்துறை யின் வாதத்தை நீதிமன்றம் அடியோடு நிராகரித்தது.

வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ககன் கீத் கவுர், தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டித்துத் தனது தீர்ப்பில், “இது ஒரு ஆரம்பம் தான், இன்னும் பெரிய போராட்டங்கள் காத்துக் கிடக்கின்றன, புரட்சி ஓங்குக (Long Live the Revolution)’ என்று முழங்குவது ஒரு குற்றமாகப் பார்க்கப்படுமேயானால், இந்த ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பே வெட்கப்பட வேண்டும்” என்று சாடினார்.

தொழிற்சங்கங்களை அமைப்ப தும், தங்களின் உரிமைகளுக்காக அமைதியான முறையில் ஒன்று கூடுவதும் இந்திய அரசி யலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், தொழிலாளர்களைத் தொடர்ந்து சிறை யில் அடைக்க எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இல்லை எனக் கூறி ஜாமீன் வழங்கியது.

சிஐடியு முற்றுகைப் போராட்டமும் வர்க்க வெற்றியும் இப்போராட்டத்தை முடக்க நினைத்த மானேசர் குற்றப் புல னாய்வுப் பிரிவு காவல்துறையினர், மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 1 மணி முதல் காலை 8:30 மணி வரை இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) ஹரியானா மாநில பொதுச் செயலாளர் ஜெய் பகவான் மற்றும் துணைத் தலைவர் வினோத் குமார் ஆகியோரின் வீடுகளை முற்றுகை யிட்டு அவர்களைக் கைது செய்ய முயன்றனர்.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் காவல்துறையின் இந்த அராஜகத்தைக் கண்டித்து, மே 9 அன்று ரோதக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்களும் பொதுமக்களும் திரண்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவிலும், ஹரியானாவின் மானேசரிலும் ஒரே மாதிரியான அடக்குமுறைகளைக் கையாண்டு தொழிலாளர்களின் குரலை ஒடுக்க நினைக்கும் அர சுகளுக்கு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.

அரசாங்கமும் காவல்துறையும் தொழில்துறை முதலாளிகளின் பக்கம் நிற்பதை விடுத்து, தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளான 8 மணி நேர வேலை, கூடுதல் நேரப் பணிக்கு இரட்டை வீத ஊதியம், இபிஎப் மற்றும் இஎஸ்ஐ போன்ற சமூகப் பாது காப்புத் திட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என சிஐடியு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைத்துத் தொழி லாளர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி வடஇந்தியத் தொழிலாளர் வர்க்கம் நடத்தி வரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த நீதிமன்றத் தீர்ப்பு மிக முக்கிய வர்க்க வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது.

தி லெப்ட் வியூஸ்