தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஹரியானாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டம் வெற்றி

16 May 2026, 8:55 pm
ஹரியானாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டம் வெற்றி

ஹரியானாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டம் வெற்றி

பாஜக ஆளும் ஹரியானாவின் உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத் துறை ஊழியர்கள் நடத்திய தொடர் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த சர்வ கர்மாச்சாரி சங்க அமைப்பிற்கும், தொழிலாளர்களுக்கும் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தனது புரட்சிகரமான வாழ்த்துக ளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் எளமரம் கரீம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது,“கடந்த 2026ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் மாநில நிர்வாகத்தை முடக்கி உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத் துறை ஊழியர்கள், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மே 14 அன்று அகில இந்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் திரண்டது.

இந்த உறுதியான, ஒன்றுபட்ட வர்க்கப் போராட்டமே, அரசு பணிந்து வந்து ஒப்பந்தம் போட முக்கியக் காரணமாக அமைந்தது.

போராட்டத்தின் மூலம் வென்றெடுக்கப்பட்ட உரிமைகள் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களான பவிச்சந்த் சர்மா, ரன்பீர் சிங் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடும், அரசு வேலை யும் வழங்க அரசு ஒப்புக் கொண் டு0ள்ளது.

அதே போல 55 வயதுக்குட்பட்ட 13,000 உள்ளாட்சி, தீயணைப்புத் துறை ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான புதிய நிரந்தரப் பணியிடங்களும் உரு வாக்கப்படும். பணிநீக்கம் செய்யப்பட்ட சுமார் 5,000 ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். தொழிலாளர்கள் மீதான பழி வாங்கும் நடவடிக்கைகள் அனை த்தும் திரும்பப் பெறப்படும்

தீய ணைப்புத் துறை ஊழியர்களுக்கு ரூ. 25,500 ஊதிய விகிதம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று தூய்மைப் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ சலுகைகளுடன் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,220 உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதாளச் சாக்கடை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.

5,000 அபாயப் படி வழங்கப்படும். ஊழி யர்களுக்கான மருத்துவ விடுப்பு நாட்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்க வேண்டும் இந்த உரிமைகளை நிறை வேற்றுவதற்கான ஒப்புதலை, வரும் 2026 ஜூன் 30-க்குள் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு முறைப்படி பெற வேண்டும் என்ப தால், தொழிலாளர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

இப்போராட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கத்திற்கே ஒரு நம்பிக்கையின் ஒளியாகத் திகழ்கிறது” என அறிக்கையில் சிஐடியு பாராட்டுத் தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.