தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வணிக நிறுவனங்களில் 10 மணி நேர வேலை ஹரியானா பாஜக அரசு உயர்த்தியது

24 Dec 2025, 3:39 pm
வணிக நிறுவனங்களில் 10 மணி நேர வேலை ஹரியானா பாஜக அரசு உயர்த்தியது
<p><strong>வணிக நிறுவனங்களில் 10 மணி நேர வேலை ஹரியானா பாஜக அரசு உயர்த்தியது</strong></p> <p>சண்டிகர் ஹரியானாவில் உள்ள பாஜக அரசு, கடைகள் மற்றும் தனி யார் வணிக நிறுவனங்களில் ஊழியர்களின் வேலை நேரத்தை ஒன்பது மணி நேரத்திலிருந்து பத்து மணி நேரமாக உயர்த்தியுள்ளது. இதற்காக, ஹரியானா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (திருத்த) மசோதா, 1958 திருத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு தொடர்ச்சி யான பாதுகாப்பை உறுதி செய்வ தும் பொருளாதார வளர்ச்சியை மேம் படுத்துவதும் இந்த மசோதாவின் நோக் கம் என அரசு அதை நியாயப்படுத்து கிறது. சீர்திருத்தங்கள் சிறு நிறுவ னங்களின் மீதான சுமையைக் குறைப் பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் அனில் விஜ் கூறிக்கொண்டார். இந்த மசோதா வணிகம் செய்வதை எளிதாக்காது, மாறாக &ldquo;நவீன அடிமைத் தனத்தை&rdquo; சட்டமாக்குகிறது என்று எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியது. ஓவர் டைம் 156 மணி &nbsp;நேரமாக அதிகரிப்பு புதிய ஹரியானா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (திருத்தம்) மசோதா 2025, ஓவர்டைம் (கூடுதல் நேர) அடிப்படையில் தொழிலாளர்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்தும். காலாண்டிற்கு அனுமதிக்கப்பட்ட கூடு தல் நேர வேலை வரம்பு 50 மணி நேரத்தி லிருந்து 156 மணி நேரமாக கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த நியா யப்படுத்தல் என்னவென்றால், கடை கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் உச்ச வணிக தேவைகளை மிகவும் திற மையாக பூர்த்தி செய்வதை இது எளி தாக்கும். மேலும், இடைவேளை இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யக் கூடிய அதிகபட்ச நேரத்தை ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமாக உயர்த்தவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. தினமும் 10 மணிநேர வேலை மற்றும் இரண்டு மணிநேர கூடுதல் நேர வேலை செய்ய அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.