மக்கள் பணியும் நடைபெறவில்லை: கவுன்சிலர்கள் தர்ணா
11 Jun 2026, 11:23 pm

மக்கள் பணியும் நடைபெறவில்லை: கவுன்சிலர்கள் தர்ணா

தருமபுரி, ஜூன் 11- அரூர் நகராட்சியில் எந்தவொரு மக்கள் பணிகளும் நடைபெறவில்லை எனக்கூறி, நகராட்சி அலுவலகம் முன்பு நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்ட னர்.

தருமபுரி மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த அரூர், கடந்த ஆட்சியில் நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது.

இந்நிலையில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு வருடங்களாக எந்தவொரு மக்கள் பணி யும் நடைபெறவில்லை மாதாந்திர கூட்டம் சரிவர கூட்டப்படவில்லை. வள்ளிமதுரை அணையிலிருந்து அரூர் நகராட்சிக்கு நீரேற்றும் திட்டம் மூலம் குடிநீர் கொண்டுவரும் பணியை நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் செயல்படுத்தியுள்ளனர்.

அலுவலகத்திற்கு உறுப்பினர்கள் சென்றால், தலைவர் அறை பூட்டியே உள்ளது. ஆணையாளரை கேட்டால் தகுந்த பதில் அளிப்பதில்லை. அரூர் நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது; அதை முழுமை யாக விசாரிக்க வேண்டும்.

உறுப்பினர் தங்களின் அடிப் படை கோரிக்கைகள் குறித்து மனு அளித்தாலும், நக ராட்சி ஆணையர் மற்றும் தலைவர் இருவரும் நடவ டிக்கையும் எடுக்கப்பதில்லை.

கடந்த 5 மாதங்களாக நகராட்சி உறுப்பினர்கள் கூட் டம் கூட்டப்படவில்லை. இதனால் மக்களின் அடிப் படை பிரச்சனைகள் தீர்க்க முடியவில்லை.

குறிப்பாக, மின்சாரம் பழுது, சாக்கடை கால்வாய், குடிநீர் பிரச்சனை மற்றும் சிறு சிறு பணிகளை செய்ய வேண்டும் என நக ராட்சி அலுவலகத்தில் மனு அளித்தாலும், எந்த ஒரு நட வடிக்கையும் எடுப்பதில்லை. லிங்காபுரத்தில் உள்ள நூறு ஆண்டு காலமாக உள்ள மண்சாலையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும், நகராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.

அதிகாரிகள் அலட்சியம் காட்டு வதாக குற்றஞ்சாட்டி, வியாழனன்று நகராட்சி அலுவல கம் முன்பு நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடு பட்டனர். மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும், என்றனர்.

இதில் கவுன்சிலர்கள் பேக்கரி பெருமாள், கலைவாணன், பூபதி, அன்புமணி, ஜெயலட்சுமி, வெங்கடேசன், சரிதா, மகாலட்சுமி, ராணி, முசரத் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.