விளையாட்டு
27 Oct 2026, 8:42 pm

விளையாட்டு

ஹாரி, அலெக்சியாவிற்கு பாலன் டி ஆர் விருதுகள்

கால்பந்து விளையாட்டின் மிக உயரிய விருது பாலன் டி ஆர் (Ballon d’Or) ஆகும். பிரான்ஸ் கால்பந்து (France Football) இதழால்1956ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான 70ஆவது பாலன் டி ஆர் விருதுகள் வழங்கும் விழா இங்கிலாந்து நாட்டின் லண்டன்நகரில் உள்ள பாலேடியம் அரங்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை (இந்திய நேரம்) நடைபெற்றது.

ஹாரி

அதன்படி, ஆடவர் பிரிவில் இங்கிலாந்து நாட்டின் கேப்டன் ஹாரி கேன் பாலன் டி ஆர் விருதை வென்றுள்ளார். பேயர்ன் முனிச் (ஜெர்மனி கிளப்) அணிக்காக ஹாரி விளையாடி வருகிறார். இதன்மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலன் டி ஆர் விருதை வெல்லும் இங்கிலாந்து வீரர் என்றபெருமையை ஹாரி பெற்றுள்ளார். கடைசியாக 2001ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஓவன் பாலன் டி ஆர்விருதை வென்றார்.

அலெக்சியா

மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை அலெக்சியா புடேலாஸ் பாலன் டி ஆர் விருதை கைப்பற்றியுள்ளார். அலெக்சியாமகளிர் பார்சிலோனா (ஸ்பெயின் கிளப்) அணிக்காக விளையாடி வருகிறார். அலெக்சியாவுக்கு இது 3ஆவது பாலன் டி ஆர்விருது ஆகும். ஏற்கெனவே கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை பாலன் டி ஆர் விருதை வென்றிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அபிஷேக் சர்மா அதிரடி சதம் நியூஸி.,க்கு எதிரான டி-20 தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்

டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டி களைக் கொண்ட தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்துநாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வாக தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிப்பெற்ற நிலையில், 3ஆவது போட்டி வெல்லிங்டனில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, டேரில் மிட்சல் (52 பந்துகளில் 89 ரன்கள்) அதிரடி அரைசதத்தின் உதவியால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

அபிஷேக் மிரட்டல்

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே அதிரடியில் மிரட்டத் தொடங்கியது. தொடக்க வீரர்கள் சூர்யவன்ஷியும், அபிஷேக் சர்மாவும் நியூஸிலாந்துபந்துவீச்சைபுரட்டியெடுத்தனர். சூர்யவன்ஷி 19 பந்துகளில் 45 ரன்கள் (4 சிக்ஸ், 4 போர்) எடுத்து ஆட்மிழந்தார். சஞ்சு சாம்சன் சிறிது நேரம்அதிரடி காட்டி 18 ரன்களிலும், ஸ்ரேயாஸ் (5 ரன்கள்) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் அதிரடியில் தொடர்ந்து மிரட்டிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். இது அவருக்கு 4ஆவது சதம் ஆகும். அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 113 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதன்பிறகு திலக் வர்மா (1), நமன் தீர் (4) இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.இந்தியா 13.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. மேலும் 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 3-0என்ற கணக்கி லும் கைப்பற்றியது. 4ஆவது டி-20 போட்டி அக். 30 அன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது.