விளையாட்டு
6 Oct 2026, 8:57 pm

விளையாட்டு

சீன ஓபன் டென்னிஸ் ஒசாகா அதிர்ச்சித் தோல்வி

2026ஆம் ஆண்டிற்கான சீன ஓபன் டென்னிஸ் தொடர் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள முன்னணி வீராங்கனையான ஜப்பானின் ஒசாகா, 7ஆவதுஇடத்தில் உள்ள செக்குடியரசின் முச்சோவாவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை முச்சோவா 7-5 என்ற கணக்கில் கைப்பற்ற, 2ஆவது செட்டை 6-1 என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றி ஒசாகா பதிலடி கொடுத்தார். இந்த பதிலடி ஆட்டங்களால் வெற்றியை நிர்ணயிக்கும், 3ஆவது செட் மிக பரபரப்பாக நடைபெற்றது. எனினும் வெற்றிப் புள்ளிகளில் ஆதிக்கம் செலுத்திய முச்சோவா 3ஆவது செட்டை 7-6 (9-7) என்ற செட் கணக்கில் கைப்பற்றி, 7-5, 1-6, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இறுதிவரை வெற்றிக்காக கடுமையாக போராடிய கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளரான ஒசாகா அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார்.

காலிறுதிக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள்

ஆண்டிரிவா, அலெக்ஸாண்ட்ரோவா (இருவரும் ரஷ்யா)

பிரிட்டன் ஜோடி சாம்பியன்

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசை யில் 2ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஜூலியன், கிளாஸ்பூல் ஜோடி - தரவரிசையில் இல்லாத நெதர்லாந்தின் சாண்டர்ஸ், டேவிட் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பிரிட்டன் ஜோடி 6-3, 3-6, 10-5 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் திடீர் ராஜினாமா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, அவர்முடிவை அறிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டில் ஹர்மன்ப்ரீத் இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார் என்ற நிலையில், இதுதொடர்பாக ஹர்மன்ப்ரீத் கவுர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”இது எளிதான முடிவு அல்ல. பல வருடநினைவுகள், உணர்வுகள், தியாகங் களை இது உள்ளடக்கியது. அணிதான் முதலில் வர வேண்டும் என்பதற்காக எனது தனிப்பட்ட லட்சி யங்களை ஒதுக்கி வைத்துள்ளேன்” என அவர் கூறியுள்ளார். அதே சமயம்கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும், தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்து தொடரப் போவதாக ஹர்மன்ப்ரீத் உறுதிப்படுத்தியுள்ளார்.

ராஜினாமாவுக்கு இதுதான் காரணமா?

ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றது உள்ளிட்டவரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளுக்கு அவர் தலைமை தாங்கிய ஹர்மன்ப்ரீத் கவுரின் ராஜினாமா குறித்து உறுதியான காரணம் தொடர்பாகஇதுவரை செய்திகள் வெளியாகவில்லை.

ஆனால் சமீபத்தில் நிறைவுபெற்ற டி-20 உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதிபெறத் தவறியது மற்றும் அவரது மந்தமான ஆட்டம்காரணமாக தொடர்பாக விமர்சனங்களால் ஹர்மன்ப்ரீத் ராஜினாமா செய்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.