மாநிலங்களவை இடைத்தேர்தல் - ஹர்தீப் சிங் பூரி வேட்பாளராக அறிவிப்பு!
28 Oct 2026, 5:00 pm

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு, ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எல்.முருகன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காலியானதாக மாநிலங்களவை இடத்திற்கு நவம்பர் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் 26-ஆம் தேதி முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜனவரி 2018-இல் உத்தரப் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினரானார். அதன் பிறகு நவம்பர் 2020-இல் மீண்டும் உ.பி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் நவம்பர் 25, 2026 அன்று முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.