முந்தய பக்கம்

உழைப்பே மூலதனம்!

30 May 2026, 10:53 pm
உழைப்பே மூலதனம்!
<p><strong>உழைப்பே மூலதனம்!</strong></p><p>எந்த நேரமும் உழைக்கின்ற எறும்புக் கூட்டம் பாருங்கள்! சொந்த உறவை மறக்காமல் சூழ்ந்தே இருப்பதைக் காணுங்கள்! ஒன்றன் பின்னே ஒன்றாக ஊர்வலம் செல்லும் ஒழுங்காக! நன்றாம் அதனைப் பின்பற்றி நடப்போ மாயின் வளம்சேரும்! முட்டை கொண்டு எறும்பெல்லாம் முயன்று உயரே ஏறுவதால் கொட்டும் பெருமழை என்பதையே குறிப்பால் நமக்கு உணர்த்திடுமே! கரும்பாய் இனிக்கும் பொருள்நாடி கவனம் கொண்டு சென்றிடுமே! எறும்பில் பலவகை உண்டிங்கே! ஏற்றத் தாழ்வு அதிலில்லை! வேற்றுமை எதுவும் பார்க்காமல் வீணே சுற்றித் திரியாமல் ஏற்றம் ஒன்றே குறியாக எறும்பைப் போலப் பாடுபடு! ஒற்றுமை அதனிடம் கற்கலாம் ஒன்றாய் வாழப் பழகலாம்! வெற்றுக் கூட்டம் போடாமல் வெற்றியின் உழைப்பே மூலதனம்! </p>
Share
FacebookXWhatsAppTelegram