தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் மாயம்!

5 Jun 2026, 12:34 am
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் மாயம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் மாயம்!

சென்னை, ஜூன் 4 - சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில் சுமார் 18 ஹார்டு டிஸ்க்குகள் காண வில்லை என்று சிந்தாதிரிப் பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

கடந்த மே 16, 17 ஆகிய தேதி களில் மின்வாரியத் தலைமை அலு வலகத்தில் குறைவான ஊழியர்கள் இருந்த சமயத்தில் இந்தத் திருட்டு நடந்ததாகக் கூறப்படுகிறது. காணா மல்போன ஹார்டு டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல் டெண்டர் மற்றும் ரகசிய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட தக வல்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படு கிறது. மின்வாரியத் தலைமையகம் குறித்த உள்தகவல் தெரிந்தவர்களே இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று செய்தி யாளர்களிடம் விளக்கமளித்தார்.

அதில், திருடப்பட்ட ஆவணங் களின் தகவல்களை மீட்க நட வடிக்கை எடுக்கப்படுவதாகவும், மின் வாரிய அலுவலகங்களில் கணினி ஆவணங்களைப் பாதுகாக்க அதி காரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ள தாகவும் தெரிவித்தார். கடந்த மாதம் சிலரைப் பணியிடை நீக்கம் செய்த பின்னர் இது நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவ தாக அவர் கூறினார்.

மின் ஊழியர் மத்திய அமைப்பு அறிக்கை 3

மின்வெட்டைத் திசைத் திருப்பும் நடவடிக்கை!

ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக கூறப்படும் விவகாரம் குறித்து, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது குறித்து புகாரை முறைப்படி விசாரணை செய்து குற்றம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை திசைத் திருப்புவதற்காகவே, தவெக அரசு, ஹார்ட் டிஸ்க் பிரச்சனையைக் கையில் எடுத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

=காரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.