கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 22-ல் ஆர்ப்பாட்டம் கைத்தறித் தொழிலாளர்கள் முடிவு
11 Oct 2026, 1:16 am

கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 22-ல் ஆர்ப்பாட்டம் கைத்தறித் தொழிலாளர்கள் முடிவு

கடலூர்,அக்.10-கைத்தறித் தொழி லாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.2,306 கூலியைக் குறைக்காமல் வழங்க வேண்டும், தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத கூலி உயர்வு, 10 சதவீத அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர் 22 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கைத்தறித் துறையில் செயல்படும் அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுக நெச வாளர் அணி மாவட்டத் தலைவர் ஆர். சேகர் தலைமை வகித்தார். சிஐ டியு கைத்தறிச் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தார். கைத்தறித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் பி. கருப்பையன் பேசினார்.

கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்; இலவச

வேட்டி, சேலை உற்பத்திக்

கான கூலியை கைத்தறி மற்றும் பெடல் தறிகளுக்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டன.

கூட்டத்தில் திமுக நெச வாளர் அணி மாவட்டத் துணைத் தலைவர் மு. பாஸ்கர், குறிஞ்சிப்பாடி நகர அமைப்பாளர் வி. மதிய ழகன், நகர நெசவாளர் அணி நிர்வாகிகள் பி. சண்முகம், எம். பாலு, சிஐடியு கைத்தறிச் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம், மாவட்டப் பொருளாளர் இ. தயாளன், மாவட்ட நிர்வாகிகள் எம். கந்தசாமி, ஜி.பழனி, ஏ. குமார், வி.முருகவேல், ஆர். ராஜவேல், அண்ணா தொழிற்சங்க கைத்தறிப் பிரிவு மாவட்டத் தலைவர் கே.டி. ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் ஏ. வேலு, மாவட்டப் பொரு ளாளர் பி. குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.