தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குறை மின்னழுத்தம் காரணமாக கைத்தறி நெசவாளர் பாதிப்பு! ஆரணி மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

27 Feb 2026, 5:32 pm
குறை மின்னழுத்தம் காரணமாக  கைத்தறி நெசவாளர் பாதிப்பு! ஆரணி மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
<p><strong>குறை மின்னழுத்தம் காரணமாக &nbsp;கைத்தறி நெசவாளர் பாதிப்பு! ஆரணி மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருவண்ணாமலை, பிப். 27- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதியில் கணிசமான குடும்பத்தினர் பட்டு கைத்தறி நெசவு தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். &nbsp; ஆரணியை அடுத்த மெய்யூர் ஊராட்சியில் கடந்த பல ஆண்டுகளாக குறை மின் அழுத்தம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, நெசவு உற்பத்தியும், தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2025 நவம்பர் மாதம் 12-ஆம் தேதி பட்டு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் சார்பில், உயர் மின் அழுத்தம் வழங்கிட கோரி மனு கொடுத்தும், திட்டமதிப்பீடு உருவாக்கியும், இன்று வரை உயர் மின் அழுத்தம் விநியோகிக்கப்படவில்லை. பட்டு கைத்தறி தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக செயல்படாமல், மெத்தனப் போக்கோடு செயல்பட்டு வரும் துணை மின் நிலைய அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து, ஆரணி மின்சார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;வெள்ளியன்று (பிப்,27) &nbsp;பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மின்வாரிய அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வார காலத்தில் உயர் மின் அழுத்தம் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டு கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகிகள் இளங்கோ, ரமேஷ், எம்.வீரபத்திரன், சிஐடியு நிர்வாகிகள் பெ.கண்ணன், சம்பத், தமிழ்செல்வன், பால்ராஜ், வெங்கடேசன் மற்றும் நெசவாளர் பலர் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.