வேளாங்கண்ணியில் கைப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு
13 Mar 2026, 4:52 pm
<p><strong>வேளாங்கண்ணியில் கைப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு</strong></p>
<p>நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும், வேளாங்கண்ணி பேரூராட்சி நிதியிலிருந்தும் ரூ.39.35 லட்சம் செலவில், மீனவ இளைஞர்களுக்கான கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டு மைதானம் கட்டப்பட்டது. வேளாங்கண்ணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மைதானத்தை வெள்ளியன்று கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி திறந்து வைத்து, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கீழையூர் கிழக்கு திமுக ஒன்றியச் செயலாளர் ஆ.தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் ஆ.டயானா சர்மிளா, பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
