குப்பை சேகரிப்போரின் சமூக அந்தஸ்துக்காகக் குரல் கொடுக்கும் ‘ஹேண்ட் இன் ஹேண்ட்’ அமைப்பு
yesterday

குப்பை சேகரிப்போரின் சமூக அந்தஸ்துக்காகக் குரல் கொடுக்கும் ‘ஹேண்ட் இன் ஹேண்ட்’ அமைப்பு

சென்னை, செப்.13-காஞ்சிபுரத்தில் தோன்றி சர்வதேச அளவில் வளர்ந்துள்ள ‘ஹேண்ட் இன் ஹேண்ட்’ அமைப்பு, குப்பை சேகரிப்போர் மற்றும் விளிம்புநிலை மக்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், ஆப்கானிஸ்தான், கம்போடியா, மியான்மர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடு களிலும், இந்தியாவில் 20 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலும் இயங்கி வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் வறுமையை ஒழித்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது.

ஆதார் அட்டை போன்ற அடிப்படை ஆவ ணங்கள் கூட இல்லாமல் நாடோடிகளாக வாழ்ந்து வந்த குப்பை சேகரிப்போரைக் கண்டறிந்து, அவர்களுக்கு இலவசக் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் உபகரணங்களை வழங்கி இந்த அமைப்பு கைதூக்கிவிட்டுள்ளது. பூமியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, மழைநீர் பூமிக்கு அடியில் சேமிக்கப்படுவதற்குப் பெரும் பங்காற்றி வரும் இவர்களை, சமூகத்தில் தவறான கண்ணோட்டத்துடன் அணுகும் போக்கு நிலவுகிறது.

எனவே, இவர்களுக்கு ‘மறு சுழற்சி பாதுகாவலர்கள்’ என்று அதி காரப்பூர்வமாகப் பெயர் சூட்டினால், அது அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதுடன், அரசு நலத்திட்டங்கள் எளிதில் கிடைக்க வழிவகுக்கும் என்ற கோரிக்கையை இந்நிறுவனம் முன்வைத்துள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு அரசு அதிகாரிகளிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இவ்வமைப்பு காத்திருக்கிறது.