சுத்தியல், அரிவாள், நட்சத்திரம்
28 Mar 2026, 4:13 pm
<p><strong>சுத்தியல், அரிவாள், நட்சத்திரம்</strong></p>
<p>25 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்கம், ராய்கஞ்ச் தொகுதி யில் நேரடியாக சிபிஎம் களம் இறங்கியுள்ளது. வேட்பாளராக ஜிபனந்த சிங்காவின் பெயர் அறிவிக்கப்பட்டதும், தொகுதி முழு வதும் கட்சியின் உறுப்பினர்களும்,ஆதரவாளர்களும் கொண்டாடி யிருக்கிறார்கள். இளைஞர்கள் முதல் மூத்த உறுப்பினர்கள் வரையில் இதற்காகத்தானே காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கருத்து களை தெரிவித்துள்ளனர். இந்த உற்சாகம் தொகுதியில் நடக்கத் தொடங்கி யுள்ள பணிகளில் பிரதிபலிக்கிறது. தொகுதியின் பல சுவர்களில் உடனடி யாக சுத்தியல், அரிவாள், நட்சத்திரச் சின்னம் பளிச் என்று தெரிந்தது. முதல் நாளிலேயே வேட்பாளருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணி யில் பெருந்திரள் பங்கேற்பு உற்சாகத்தைக் கூட்டியிருக்கிறது.</p>
