சகுந்தலா அம்மையார் படத்திறப்பு
22 Mar 2026, 4:19 pm
<p><strong>சகுந்தலா அம்மையார் படத்திறப்பு</strong></p>
<p>மன்னார்குடி, மார்ச் 22- சிபிஎம் மன்னார்குடி நகர முன்னாள் செயலாளரும், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான ஜி. ரகுபதியின் தாயார் சகுந்தலா கோவிந்தராஜ் அம்மையார் மார்ச் 8 அன்று காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. சகுந்தலா அம்மையாரின் படத்திற்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர். கே.பி. ஜோதிபாசு, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.கே.என். அனிபா, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் இரா. மாலதி, கட்சி நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன், தையல் சங்க மாவட்டத் தலைவர் டி. ஜெகதீசன் சிபிஐ நகரத் தலைவர் ஆர். ரத்தினகுமார், மாதர் சங்க நகரச் செயலாளர் எஸ். சகாயராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
