ஆலங்கட்டி மழை: 12 மணி நேரம் கடந்தும் கரையாத பனிக்கட்டிகள்
19 Mar 2026, 3:18 pm
<p><strong>ஆலங்கட்டி மழை: 12 மணி நேரம் கடந்தும் கரையாத பனிக்கட்டிகள்</strong></p>
<p>கோவை, மார்ச் 19- அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊரகப் பகுதி களில் பெய்த வரலாறு காணாத ஆலங்கட்டி மழை யால், விவசாயப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளன. அரை மணி நேரத் தில் கரைந்துவிடும் பனிக் கட்டிகள், 12 மணி நேரத்தைக் கடந்தும் கரையாமல் தேங்கிக் கிடக்கிறது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள செங்கப் பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி மற்றும் பச்சாக்கானூர் உள் ளிட்ட பல்வேறு கிராமங்களில் புதனன்று இரவு 7 மணி அள வில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வானிலிருந்து விழுந்த பனிக்கட்டிகளின் வீரியம் மிக அதிகமாக இருந்ததால், அப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நான்கு மாத கால வாழைப் பயிர் கள் மற்றும் பாக்கு மரங்கள் பலத்த சேதமடைந்தன. அதி வேகத்தில் விழுந்த பனிக்கற்கள் தாக்கியதில் பயிர்களின் இலைகள் கிழிந்தும், மரங்கள் ஒடிந்தும் விழுந்துள்ளன. இதுவரை யாரும் பார்த்திராத ஒரு இயற்கை பேரிடர் போல இந்த ஆலங்கட்டி மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். சேத மடைந்த பயிர்கள் இனி மேற்கொண்டு வளர வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அவர்கள் வேதனை தெரி விக்கின்றனர். வழக்கமாக ஆலங்கட்டி மழை பெய்த அரை மணி நேரத்தில் பனிக்கட்டிகள் கரைந்துவிடும் நிலையில், இங்கு 12 மணி நேரத்தை கடந்தும் பனிக்கட்டிகள் கரையா மல் விளைநிலங்களிலும் சாலை ஓரங்களிலும் தேங்கிக் கிடப் பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் கவலை யையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உரிய ஆய்வு நடத்தி, தகுந்த நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.</p>
