ஹபீபி திரைப்படக்குழுவினருக்கு தமுஎகச பாராட்டு விழா
24 Jul 2026, 9:58 pm
<p><strong>ஹபீபி திரைப்படக்குழுவினருக்கு தமுஎகச பாராட்டு விழா</strong></p><p>திருவில்லிபுத்தூர் ,ஜூலை 24- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவில்லி புத்தூர் கிளை சார்பில் ஹபீபி திரைப்பட குழுவின ருக்கு பாராட்டு விழா ரேவதி திரையரங்கில் நடை பெற்றது. விழாவிற்கு கிளை தலைவர் முனியாண்டி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் தன லட்சுமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் நந்தன் கனகராஜ் ,மாவட்ட பொரு ளாளர் எழுத்தாளர் சசிரேகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருவில்லி புத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் கார்த்திக், மாநில செயற் குழு உறுப்பினர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், மாநில துணைப் பொதுச் செயலா ளர்கள் கா.வேலாயுதம், லட்சுமி காந்தன், எழுத்தா ளர் ஜா.மாதவராஜ் ஆகி யோர் பாராட்டிப் பேசினர். திரைப்படக் குழுவினர் சார் பில் மீரா கதிரவன் பேசினார்.</p>
