‘ஹபீபி’ திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டு
20 Jul 2026, 11:29 pm
<p><strong>‘ஹபீபி’ திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டு</strong></p><p>கோவை, ஜூலை 20 – தமுஎகச சார்பில் கோவை கே.ஜி. திரை யரங்கில் ‘ஹபீபி’ திரைப்பட திரையிடலும் மற்றும் திரைப்படக் கலைஞர்களுக்கான பாராட்டுவிழாவும் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில் ‘ஹபீபி’ திரைப்படக் கலைஞர்களுக் கான பாராட்டு விழா நடைபெற்றது. கோவை கே.ஜி. திரையரங்கில் ஞாயிறன்று காலை 9 மணிக்கு இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழா விற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.கரீம் தலைமை வகித்தார். தி.மணி வரவேற் புரையாற்றினார். வெ.மைதிலி, இரா.பானு மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், ‘ஹபீபி’ திரைப்படம் குறித்து எழுத்தாளர்கள் பாமரன், மு.சந்திரகுமார் ஆகியோர் கருத்துரை வழங் கினர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர் மீரா கதிரவன், கோவை மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப் ்பாளர் சி.பத்மநாபன், தொழில் முனைவோர் டி.பாலசுந்தரம், கிளாஸ்டர் திரைக் கல்லூரி முதல்வர் அரிஹரசுதன் மற்றும் படக்குழுவி னர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் படக்குழுவினரின் அனுபவங்கள் குறித்துப் பேசினார். எழுத்தாளர் மு.ஆனந்தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிறைவாக தமுஎகச மாவட்டத் தலைவர் மு.காளிநாதன் நன்றி கூறினார். இவ்விழாவில் கலை, இலக் கியத் துறையினர் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.</p>
