ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் சிஜேபி எச்சரிக்கை
24 Sept 2026, 9:10 pm

ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் சிஜேபி எச்சரிக்கை

வாக்காளர் பட்டியல் நடைமுறைகள் மற்றும் சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறை தொடர்பான முடிவுகள்மற்றும் உத்தரவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில்குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் எனக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சிஜேபி நிறுவன ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ்

தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள்சந்திப்பின் போது நேரில் பேசுகையில், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மிகப்பெரிய தேசவிரோதி. இந்திய ஜனநாயகத்துக்கு அவர் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளார். எனவே, அவர் உடனடியாகப்பதவி விலக வேண்டும். 48 மணி நேரத்துக்குள் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும். இல்லாவிட்டால், நாடு தழுவிய போராட்டம் மற்றும் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தை சிஜேபி தொடங்கும்.எங்களின் இரண்டாவது கோரிக்கை, வர இருக்கும் அனைத்துத் தேர்தல்களையும் உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறைக்கு முந்தைய வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்த வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர்நடைமுறைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய ஒரு சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

எஸ்ஐஆர் தொடர்பான முடிவெடுக்கும் செயல்முறை தொடர்பான கோப்புகளைத் தேர்தல் ஆணையம் அழிப்பதற்கு முன்பாக உச்சநீதிமன்றம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான 2023ஆம் ஆண்டு சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பது எங்களின் மூன்றாவது கோரிக்கை. இதற்கெனச் சிவில் சமூகக் குழுக்களை உள்ளடக்கியஒரு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்”என்று அவர் தெரிவித்தார்.